சிதம்பரம் கோவிலில் கனகசபை மீதேறி பக்தர்கள் வழிபட அனுமதி - தமிழக அரசு அறிவிப்பு..!

Government of Tamil Nadu
By Thahir May 19, 2022 03:59 AM GMT
Report

சிதம்பரம் நடராஜர் கோவிவில் கனகசபை மீதேறி பக்தர்கள் வழிபட அனுமதி வழங்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

கடலுார் மாவட்டம் சிதம்பரத்தில் உலக புகழ்பெற்ற நடராஜர் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக கனகசபையின் மீது ஏறி சாமி தரிசனம் செய்ய பொதுமக்களுக்கு அனுமதி நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.

சிதம்பரம் கோவிலில் கனகசபை மீதேறி பக்தர்கள் வழிபட அனுமதி - தமிழக அரசு அறிவிப்பு..! | Devotees Are Allowed Chidambaram Temple

இது குறித்து கடந்த சில நாட்களாக பல்வேறு அரசியல் கட்சியினரும் மற்றும் போராட்ட குழுவினர் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர்.

கனகசபை மீது ஏறி வழிபட அனுமதி அளிக்குமாறு பக்தர்கள் நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வந்தனர். இதையடுத்து சிதம்பரம் நடராஜர் கோவிலில் கனகசபை மீதேறி பக்தர்கள் வழிபட அனுமதி அளித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.