இனி பேச மட்டுமல்ல மொபைல் எண்ணுக்கே தனி கட்டணம் - டிராய் திட்டம்
மொபைல் எண்களுக்கும் கட்டணம் வசூலளிக்க வேண்டும் என TRAI பரிந்துரை செய்துள்ளது.
TRAI
இனி இந்தியாவில் பயன்படுத்த படும் மொபைல் மற்றும் லேண்ட் லைன் எண்களுக்கு கட்டணம் வசூலிக்க வேண்டும் என இந்தியத் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது.
இந்த கட்டணம் மொபைல் ஆபரேட்டர்களிடம் மீது விதிக்கப்பட உள்ளதாக தெரிவித்துள்ளது. மொபைல் ஆபரேட்டர்கள் பயனர்களிடம் இந்த கட்டணத்தை வசூலளித்து கொள்வார்கள். இது ஒரு முறை கட்டணமாகவோ அல்லது வருடாந்திர கட்டணமாகவோ வசூலிக்கலாம் என ட்ராய் அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது.
அபராதம்
ஒன்றுக்கு மேற்பட்ட சிம் வைத்திருப்பவர்கள் நீண்ட காலமாக ஒரு சிம்மை பயன்படுத்தாமல் வைத்திருந்தால், அந்த எண்ணை ரத்து செய்யாமல் வைத்திருக்கும் மொபைல் ஆபரேட்டர்க்கு அபராதம் விதிக்கவும் திட்டமிட்டுள்ளது.
எண்களுக்கு கட்டணம் விதிக்கும் நடைமுறை ஏற்கனவே ஆஸ்திரேலியா, சிங்கப்பூர், பெல்ஜியம், பின்லாந்து, இங்கிலாந்து, லிதுவேனியா, கிரீஸ், ஹாங்காங், பல்கேரியா, குவைத், நெதர்லாந்து, சுவிட்சர்லாந்து, போலந்து, நைஜீரியா, தென்னாப்பிரிக்கா மற்றும் டென்மார்க் போன்ற நாடுகளில் அமலில் உள்ளது.
ரீ சார்ஜ்