புதிய தகவல்.. உரிமை தொகை ரூ.1000 இன்னும் கிடைக்கவில்லையா? - இதை மட்டும் பண்ணுங்க!
மகளிர் உரிமை தொகை குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
உரிமை தொகை
தமிழ்நாட்டில் தற்பொழுது மகளிருக்கு மாதம் ரூ.1000 உரிமை தொகை வழங்கப்பட்டு வருகிறது. இதில் பெண்களுக்கு 2 தவணைக்கான பணம் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது. இந்த தொகை கிடைக்காதவர்கள் மேல்முறையீடு செய்து வருகின்றனர்.
இதுவரை 11 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் மேல்முறையீடு செய்தனர். அதன்படி மேல்முறையீடு செய்யப்பட்டு புதிதாக 7.35 லட்சம் பயனாளிகள் நவம்பர் மாதம் முதல் இத்திட்டத்தில் மேலும் இணைக்கப்பட்டு தற்போது மொத்தம் ஒரு கோடியே 13 லட்சத்து 84 ஆயிரத்து 300 பெண்கள் திட்டத்தின் மூலம் பயனடைந்து வருகின்றனர்.
தகவல்
இந்நிலையில், நிராகரிக்கப்பட்ட மேல்முறையீட்டு மனுதாரர்களுக்கு எஸ்எம்எஸ் அனுப்பும் பணி தற்போது தொடங்கியுள்ளதாக அரசு தரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் இது குறித்த விசாரணைக்கு தங்களை தொடர்பு கொள்வார்கள் என்றும் மேல்முறையீட்டு மனு பரிசீலிக்கப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் மகளிர் உரிமை தொகை வழங்கும் திட்டத்தில் எண்ணிக்கை அதிகரிக்கப்படும் என்று கூறப்படுகிறது.