சென்னை ரயில் பயணிகளின் கவனத்திற்கு.. ரயில் சேவையில் மாற்றம் - வெளியான தகவல்!

Tamil nadu Chennai Indian Railways
By Vidhya Senthil Aug 06, 2024 12:38 PM GMT
Report

சென்னை - செங்கோட்டை இடையே ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது . இந்த நிலையில் தாம்பரம் ரயில் நிலையத்தில் நடைபெறும் பணிகள் காரணமாக ரத்து, பகுதியான ரத்து மற்றும் வழித்தட மாற்ற விபரங்கள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

ரயில் சேவை

பொதிகை விரைவு ரயில்: வரும் 15ம் தேதி சென்னையில் இருந்து புறப்படும் ரயில் விழுப்புரத்திற்கு 30 நிமிடங்கள் தாமதமாக சென்றடையும்.

வரும் 16, 17 தேதிகளில் சென்னை - செங்கல்பட்டு இடையே பகுதியாக ரத்து செய்யப்பட்டுள்ளது. செங்கல்பட்டிலிருந்து செங்கோட்டைக்கு கிளம்பும்.

சென்னை ரயில் பயணிகளின் கவனத்திற்கு.. ரயில் சேவையில் மாற்றம் - வெளியான தகவல்! | Change In Train Service Between Chennai Sengottai

வரும் 14ம் தேதி முதல் 17ம் தேதி வரை செங்கோட்டையில் இருந்து புறப்படும் ரயில், செங்கல்பட்டு வரை மட்டுமே செல்லும்

சிலம்பு விரைவு ரயில்: வரும் 16ம் தேதி சென்னையில் இருந்து புறப்படும் ரயில் விழுப்புரத்திற்கு 30 நிமிடங்கள் தாமதமாக வரும்.

வெறும் 50 ரூபாய் தான்.. சென்னை - திருவண்ணாமலை போகலாம்; எப்படி தெரியுமா?

வெறும் 50 ரூபாய் தான்.. சென்னை - திருவண்ணாமலை போகலாம்; எப்படி தெரியுமா?

 மாற்றம்

வரும் 17ம் தேதி முழுமையாக ரயில் சேவை ரத்து வரும் 15ம் தேதி செங்கோட்டையில் இருந்து கிளம்பும் ரயில் விழுப்புரத்திற்கு 30 நிமிடங்கள் தாமதமாக வந்து செல்லும்.வரும் 17ம் தேதி ரயில் சேவை முழுமையாக ரத்து  செய்யப்பட்டுள்ளது.

சென்னை ரயில் பயணிகளின் கவனத்திற்கு.. ரயில் சேவையில் மாற்றம் - வெளியான தகவல்! | Change In Train Service Between Chennai Sengottai

சென்னை - கொல்லம் விரைவு ரயில்: வரும் 15, 16 மற்றும் 17 தேதிகளில் சென்னையில் இருந்து புறப்பட்டு விழுப்புரத்திற்கு 30 நிமிடங்கள் தாமதமாக வரும்

கொல்லம்-சென்னை விரைவு ரயில்: வரும் 17ம் தேதி கொல்லத்தில் இருந்து புறப்படும் ரயில் செங்கல்பட்டு, காஞ்சிபுரம் வழியாக சென்னை எழும்பூர் செல்லும். தாம்பரம் செல்லாது  என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.