சந்திராயன் 3: நிலவில் உள்ளது போல் மண்ணா? நாமக்கல் தேர்வானது எப்படி - வரலாறு படைக்குமா இஸ்ரோ!
நாமக்கல்லில் நிலவை போன்ற மண் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சந்திராயன் 3
இஸ்ரோ நிறுவனம் நிலவை ஆராய்வதற்காக, 2008-ஆம் ஆண்டு சந்திரயான்-1 விண்கலத்தை விண்ணுக்கு அனுப்பியது. இந்நிலையில், சந்திரயான் விண்கலத்திலுள்ள லேண்டரும் ரோவரும்
நிலவில் சரியாகத் தரை இறங்குகிறதா என்பதை சோதித்துப் பார்க்க நிலவில் உள்ளதைப் போன்ற மண் தேவைப்பட்டது. நாசாவில் ஒரு கிலோ நிலவு மண் 15,000 ரூபாய்க்கு விற்கப்படும் நிலையில் இதுபோன்ற மண் வேறெங்கும் உள்ளதா என்பதை ஆய்வு செய்தனர்.
நாமக்கல் மண்
அதன் வரிசையில், அனார்தசட் மண், நாமக்கலிலுள்ள குன்னமலை மற்றும் சித்தம்பூண்டி பகுதியில் கிடைப்பது தெரியவந்தது. அந்த மண் மாதிரிகளைக் கொண்டு சந்திரயான்-2 லேண்டர் மற்றும் ரோவர் சரியாக இறங்குகிறதா என இஸ்ரோ விஞ்ஞானிகள் வெற்றிகரமாக சோதித்தனர்.
அதனைத் தொடர்ந்து, சந்திரயான்-3 விண்கலமும் அவ்வாறே சோதிக்கப்பட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது.