சந்திராயன் 3: இதில் கூட்டாளியாக... இதை நம்பவே முடியல, அமெரிக்க பிரபலங்கள் கருத்து!

United States of America India ISRO
By Sumathi Aug 26, 2023 03:49 AM GMT
Report

சந்திரயான்-3 சாதனைக்கு கமலா ஹாரிஸ், சுந்தர் பிச்சை மற்றும் அமெரிக்க பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

சந்திரயான்-3

நிலவில் சந்திரயான் 3 வெற்றிகரமாக கால் பதித்தது. தொடர்ந்து, லேண்டர் நிலவில் கால் பதித்து சரித்திர சாதனை நிகழ்த்தியது. சந்திரயான் 3 விண்கலம் திட்டம் வெற்றி பெற்றது இந்தியாவுக்கு மட்டும் இல்லை.

சந்திராயன் 3: இதில் கூட்டாளியாக... இதை நம்பவே முடியல, அமெரிக்க பிரபலங்கள் கருத்து! | Chandrayaan 3 American Celebrities Wishes India

அமெரிக்காவுக்கும் மிக முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. இந்நிலையில், அமெரிக்க துணை ஜனாதிபதியும், இந்திய வம்சாவளியை சேர்ந்தவருமான கமலா ஹாரிஸ், நிலவின் தென்துருவத்தில் சந்திரயான்-3 வரலாற்று சிறப்புமிக்க தரையிறக்கம் நிகழ்த்தியதற்காக இந்தியாவுக்கு வாழ்த்துகள்.

பிரபலங்கள் வாழ்த்து 

திட்டத்தில் சம்பந்தப்பட்ட அனைத்து விஞ்ஞானிகள் மற்றும் என்ஜினீயர்களுக்கு இது நம்ப முடியாத சாதனை. இத்திட்டத்தில் உங்களுடன் கூட்டாளியாக இருப்பதில் பெருமைப்படுகிறோம் எனத் தெரிவித்துள்ளார்.

அமெரிக்க-இந்திய எம்.பி. ராஜா கிருஷ்ணமூர்த்தி, ''நிலவில் லேண்டர் வெற்றிகரமாக தரையிறங்கியது, இந்தியாவின் வரலாற்று சிறப்புமிக்க சாதனை. நிலவை பற்றிய ஆய்வில் மாபெரும் நடவடிக்கை'' எனக் கூறியுள்ளார்.

சுந்தர் பிச்சை தனது செய்தியில், ''இஸ்ரோவுக்கு வாழ்த்துகள். நிலவின் தென்துருவத்தில் தரையிறங்கிய முதல் நாடு என்ற பெருமையை இந்தியா பெற்றுள்ளது' எனக் குறிப்பிட்டுள்ளார். மேலும், அமெரிக்க எம்.பி.க்கள் ஜான் கோர்னின், ரிச் மெக்கார்மிக், மைக்கேல் மெக்கால், பிராட் ஷெர்மன் ஆகியோரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.