ஆட்சிக்கு வந்தால் தரமான மதுபானம், பீர்கள் விற்பனை - முன்னாள் முதல்வர் வாக்குறுதி!

India Andhra Pradesh
By Jiyath Mar 26, 2024 07:15 AM GMT
Report

தெலுங்கு தேசம் கட்சி ஆட்சிக்கு வந்த பின்னர் தரமான மதுபானங்கள் விற்பனை செய்யப்படும் என்று சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார். 

சந்திரபாபு நாயுடு

ஆந்திர மாநில முன்னாள் முதல்வரும், தெலுங்கு தேசம் கட்சி தலைவருமான இருப்பவர் சந்திரபாபு நாயுடு. இவர் தனது சொந்த தொகுதியான குப்பத்தில் நேற்று தேர்தல் பிரசாரம் தொடங்கினார்.

ஆட்சிக்கு வந்தால் தரமான மதுபானம், பீர்கள் விற்பனை - முன்னாள் முதல்வர் வாக்குறுதி! | Chandrababu Naidus Sensational Talk About Liquor

அப்போது பேசிய சந்திரபாபு நாயுடு "என்னை சட்ட விரோதமாக கைது செய்து துன்புறுத்தினர். எனக்கு பதவி முக்கியமில்லை. மாநில நலன் தான் முக்கியம். தெலுங்கு தேசம் கட்சி ஆட்சிக்கு வந்தவுடன் பெண்களுக்கு மாதம்தோறும் ரூ. 4,000 வழங்கப்படும்.

ஆந்திராவில் கஞ்சா மற்றும் போதை பொருள் விற்பனை அதிகரித்து காணப்படுகிறது. இதனால் போதையில் இருப்பவர்கள் தாய் யார்? சகோதரி யார்? என தெரியாமல் நடந்து கொள்கின்றனர்.

பெங்களூரு தண்ணீர் பஞ்சம்: குடிநீரில் காரை கழுவிய குடும்பங்கள் - அதிகாரிகள் அதிரடி!

பெங்களூரு தண்ணீர் பஞ்சம்: குடிநீரில் காரை கழுவிய குடும்பங்கள் - அதிகாரிகள் அதிரடி!

தரமான மதுபானங்கள்

மீண்டும் ஆட்சிக்கு வந்தால் ஒவ்வொரு வீட்டிற்கும் ஆண்டுக்கு ரூ.15,000 மற்றும் ஆண்டிற்கு 3 கியாஸ் சிலிண்டர்களும் இலவசமாக வழங்கப்படும். ஜெகன்மோகன் ஆட்சியில் தரமற்ற மதுபானங்கள் விற்பனை செய்வதால் அதைக் குடித்துவிட்டு கணவன்கள் இறந்து விடுவதால் பெண்கள் தாலி கொடியை இழந்து வருகின்றனர்.

ஆட்சிக்கு வந்தால் தரமான மதுபானம், பீர்கள் விற்பனை - முன்னாள் முதல்வர் வாக்குறுதி! | Chandrababu Naidus Sensational Talk About Liquor

எனது ஆட்சியில் ரூ.75-க்கு விற்கப்பட்ட மதுபானங்கள் ஜெகன்மோகன் ஆட்சியில் 2 மடங்காக விலை உயர்த்தப்பட்டது. தெலுங்கு தேசம் ஆட்சிக்கு வந்த பின்னர் குறைந்த விலையில் தரமான மதுபானங்கள், பீர்கள் விற்பனை செய்யப்படும்" என்று தெரிவித்துள்ளார்.