ஜெயித்து 5 நாள் தான் ஆனது..ரூ.579 கோடி சம்பாதித்த சந்திரபாபு நாயுடு மனைவி - அது எப்படி?
சந்திரபாபு நாயுடு இம்முறை மக்களவை மற்றும் சட்டப்பேரவை தேர்தலில் வெற்றி பெற்றுள்ளார்.
ரூ.579 கோடி
இந்திய மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக வாக்குப்பதிவுகள் நடந்து முடிந்தது. அதில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு வருகின்றன. இதுவரையிலும் உள்ள நிலவரம்படி பா.ஜ.க. கூட்டணி, காங்கிரஸ் தலைமையிலான இந்தியா கூட்டணி இடையே கடும் போட்டி நிலவியது.
இந்த சூழலில், தேர்தல் வாக்கு எண்ணிக்கையின் போது இந்திய பங்குச்சந்தை கடும் சரிவை சந்தித்தது. பங்குச்சந்தை காலை தொடங்கியபோதே கடும் சரிவை எட்டியது. இதனால் முதலீட்டாளர்களுக்கு ஒரே நாளில் ரூ30 லட்சம் கோடி இழப்பு நேரிட்டது. இது தொடர்பாக மோடி - அமித் ஷா ஆகியோருடன் தொடர்புடைய
பெரும் பங்குச்சந்தை ஊழல் நடந்திருப்பதாகவும், நாடாளுமன்ற கூட்டுக்குழு அதனை விசாரிக்க வேண்டும் எனவும் காங்கிரஸ் கோரி விடுத்தது. அந்த வரையில், , தேர்தல் முடிவுகளையொட்டிய இன்னொரு பங்குச்சந்தை மாற்றம், தெலுங்கு தேசம் கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடு குடும்பத்தை முன்வைத்து எழுந்துள்ளது.
சந்திரபாபு நாயுடு மனைவி
சந்திரபாபுவின் ஹெரிடேஜ் ஃபுட்ஸ் என்ற நிறுவனத்தின் பங்கு மதிப்பு, தெலுங்கு தேசம் கட்சியின் வெற்றியை அடுத்து வெகுவாக உயர்வு கண்டுள்ளது. தேர்தல் முடிவுகள் வெளியான 5 நாட்களில் ஹெரிடேஜ் ஃபுட்ஸின் பங்குகள் 55 சதவீதம் உயர்வு கண்டுள்ளன.
இது அந்த நிறுவனத்தின் பெரும் பங்குகளைக் கொண்டிருக்கும் சந்திரபாபுவின் மனைவி மற்றும் மகனின் சொத்து மதிப்பு எகிறவும் காரணமானது. சந்திரபாபு நாயுடு 1992ம் ஆண்டு ஹெரிடேஜ் ஃபுட்ஸ் நிறுவனத்தை நிறுவினார். பால் மற்றும் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் என இரு வணிகப் பிரிவுகள் உள்ளன. ஆந்திரா மட்டுமின்றி
கர்நாடகா, கேரளா, தமிழ்நாடு இன்னும் பல மாநிலங்களில் ஹெரிடேஜ் பால் மற்றும் பால் பொருட்களின் வணிகம் பரவிக் கிடக்கிறது. சந்திரபாபு நாயுடு மனைவியும் என்டிஆர் மகளுமான நாரா புவனேஷ்வரி இந்த நிறுவனத்தின் முதன்மை பங்குதாரராக இருக்கிறார். இவருக்கு 2,26,11,525 பங்குகளும், மகன் நாரா லோகேஷ்-க்கு 1,00,37,453 பங்குகளும் நிறுவனத்தில் இருக்கின்றன.