ஒரே வாரத்தில் 6 குழந்தைகள் பலி..ஈ,கொசு மூலம் பரவும் சண்டிபுரா வைரஸ் - அறிகுறிகள் என்ன?

Gujarat India Virus Rajasthan Death
By Swetha Jul 18, 2024 10:02 AM GMT
Report

சண்டிபுரா வைரஸால் பாதிக்கப்பட்ட 6 குழந்தைகள் மரணம் என தகவல்கள் வெளியாகியுள்ளது.

சண்டிபுரா வைரஸ் 

9 மாதங்கள் முதல் 14 வயது வரை உள்ள குழந்தைகளை தாக்கும் சண்டிபுரா வைரஸால் குஜராத், ராஜஸ்தான் உள்ளிட்ட வட மாநிலங்களில் பரவி வருகிறது. இந்த வைரஸ் கொசு, மணல் ஈ மற்றும் உண்ணி உள்ளிட்டவற்றால் பரவுகிறது.

ஒரே வாரத்தில் 6 குழந்தைகள் பலி..ஈ,கொசு மூலம் பரவும் சண்டிபுரா வைரஸ் - அறிகுறிகள் என்ன? | Chandipura Virus Spreading 6 Kids Dead

இதை பாதிக்கப்பட்டால் அடுத்த 8-10 மணி நேரத்தில் உயிரிழந்துவிடுவார்கள் என்பதால் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், பாதிக்கப்பட்ட 12 நோயாளிகளில், நான்கு பேர் சபர்கந்தா மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என்றும்,

மூன்று பேர் ஆரவல்லி பகுதியை சேர்ந்தவர்கள் என்றும், குஜராத்தில் உள்ள மஹிசாகர் மற்றும் கெடாவிலிருந்து தலா ஒருவர் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளார். இந்த சண்டிபுரா வைரஸ், சாதாரண காய்ச்சலுக்கு உள்ள அறிகுறிகளுடன் தான் காய்ச்சலை ஏற்படுத்துகிறது.

மக்களே கவனம்..அச்சுறுத்தும் வெஸ்ட் நைல் வைரஸ்? சுகாதாரத்துறை முக்கிய அறிவிப்பு!

மக்களே கவனம்..அச்சுறுத்தும் வெஸ்ட் நைல் வைரஸ்? சுகாதாரத்துறை முக்கிய அறிவிப்பு!

அறிகுறிகள் என்ன?

ஆனால் அடுத்தகட்டமாக மூளையில் வீக்கத்தை உண்டாக்க தொடங்குகின்றது. நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்களுக்கு இது பெரிய அளவிலான பாதிப்புகளையும் ஏற்படுத்துகிறது. முன்னதாக மருத்துவமனையில் உள்ள குழந்தை மருத்துவர்கள்,

ஒரே வாரத்தில் 6 குழந்தைகள் பலி..ஈ,கொசு மூலம் பரவும் சண்டிபுரா வைரஸ் - அறிகுறிகள் என்ன? | Chandipura Virus Spreading 6 Kids Dead

கடந்த ஜூலை 10ம் தேதி அன்று, நான்கு குழந்தைகளின் மரணத்திற்கு "சண்டிபுரா வைரஸ்" காரணமாக இருக்கலாம் என்று சந்தேகித்தனர். அதுமட்டுமின்றி மேலும் நான்கு குழந்தைகளுக்கும்,

அதே அறிகுறிகள் இருந்தது தெரியவந்தது. இந்த சூழலில், மக்களை காக்க அனைத்து விதமான நடவடிக்கைகளையும் அரசு எடுத்து வருவதாக சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.