இந்தியாவில் மீண்டும் பரவும் 'சந்திபுரா வைரஸ்' - WHO எச்சரிக்கை
இந்தியாவில் சந்திபுரா வைரஸ் பரவல் மீண்டும் அதிகரித்துள்ள நிலையில் உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கைவிடுத்துள்ளது.
சந்திபுரா வைரஸ்
குஜராத் மாநிலத்தில் சண்டிபுரா வைரஸ் என்ற புதிய வகை வைரஸ் பரவி வருகிறது.கடந்த ஜூன் முதல் ஆகஸ்ட் 15 இடைப்பட்ட காலத்தில் குஜராத் மற்றும் ராஜஸ்தான் மாநிலங்களில் 245 பேருக்கு சந்திபுரா வைரஸ் உறுதி செய்யப்பட்டது. இந்த வைரஸ் பாதிப்பால் இதுவரை 64 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்த நிலையில் உலக சுகாதார அமைப்பு இது குறித்து அறிக்கை வெளியிட்டுள்ளது .அதில் , மணல் ஈக்கள் (Sandflies) மூலம் மழைக்காலங்களில் பரவும் இந்த வைரஸ், இந்தியாவில் வரும் வாரங்களில் மேலும் பலருக்கு பரவுவதற்கான வாய்ப்புகள் உள்ளதாக எச்சரித்துள்ளது
அறிகுறிகள்:
திடீரென காய்ச்சல் அதிகரிக்கும்.கடுமையான தலைவலி, வாந்தி, வலிப்பு முக்கிய அறிகுறியாகும். குழப்பம், எரிச்சல் மற்றும் சில நேரங்களில் கோமாவுக்கு கூட தள்ளப்பட்டு மரணம் கூட ஏற்படலாம். இது குறித்து இன்னும் ஆய்வுகள் தொடர்ந்து நடந்து வருகிறது.
சந்திபுரா வைரஸ் பரவலை தடுக்க இதுவரை முறையான சிகிச்சைகள் மற்றும் தடுப்பூசிகள் கண்டறியப்படவில்லை.
சண்டிபுரா வைரஸ்:
சண்டிபுரா வைரஸ் என்பது சண்டிபுரா வெசிகுலோவைரஸ் (CHPV), ராப்டோவிரிடே குடும்பத்தைச் சேர்ந்த ஒரு ஆர்என்ஏ வைரஸ் ஆகும்.நாய்க் கடியால் ஏற்படும் ரேபிஸ் வைரஸும் இதில் தான் அடங்கும்.
இது முதன்முதலில் 1965இல் மகாராஷ்டிராவில் உள்ள சண்டிபுரா என்ற கிராமத்தில் கண்டறியப்பட்டதால் இது சண்டிபுரா வைரஸ் என அழைக்கப்படுகிறது.இந்த வைரஸ் அதிகம் குழந்தைகளிடையே தான் பரவும்.
இந்த நோய் வெக்டார்- பாதிக்கப்பட்ட ஒரு வகையான மணல் பூச்சி கடிப்பதால் ஏற்படுவதாகக் கூறப்படுகிறது.கடந்த 2003-ம் ஆண்டு ஆந்திரா மற்றும் மகாராஷ்டிராவில் பரவிய சந்திபுரா தொற்றால் 183 குழந்தைகள் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது