தலைவிரித்தாடும் சண்டிபுரா வைரஸ்; 50 பேருக்கு பாதிப்பு - 16 பேர் பலி!
சண்டிபுரா வைரஸ் தொற்றால் 50 பேர் பாதிப்படைந்துள்ளனர்.
சண்டிபுரா வைரஸ்
குஜராத்தில் புதிதாக சண்டிபுரா வைரஸ் தொற்று பல மாவட்டங்களில் பரவி வருகிறது. இதுதொடர்பாக பேசியுள்ள அம்மாநில மக்கள் நல்வாழ்வு அமைச்சர் ருஷிகேஷ் படேல்,
மாநிலம் முழுவதும் இதுவரை சண்டிபுரா வைரஸால் 50 பேர் பாதிக்கப்பட்டு உள்ளதாகவும், 16 பேர் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார். சண்டிபுரா வைரஸால் பாதிக்கப்பட்ட மூன்று பேர் பிற மாநிலங்களிலிருந்து வந்தவர்கள்.
அதிர்ச்சி தகவல்: சீனாவில் அதிவேகமாக பரவும் பி.எப்.7 கொடூர கொரோனா வைரஸ் - இந்தியாவில் 3 பேருக்கு கண்டுபிடிப்பு...!
16 பேர் பலி
ஒவ்வொரு கிராமம் மற்றும் சமூக சுகாதார நிலையங்களிலும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது எனவும் கூறியுள்ளார். சண்டிபுரா வைரஸ் முதன்மையாக கொசுக்கள், உண்ணி மற்றும் மணல் ஈ போன்ற நோய்க்கிருமிகளால் பரவுகிறது.
பாதிக்கப்பட்ட இந்த மணல் ஈக்கள் மனிதர்களைக் கடித்து, வைரஸை அவர்களின் ரத்த ஓட்டத்தில் செலுத்தும்போது தொற்று பரவுகிறது. அதிக காய்ச்சல், தலைவலி மற்றும் வாந்தி ஆகியவை இதன் பொதுவான அறிகுறிகளாகும்.
கடுமையான சந்தர்ப்பங்களில், நோயாளி கோமா நிலைக்கு செல்லலாம்.
குறிப்பாக குழந்தைகளில் கடுமையான மூளை அழற்சியை ஏற்படுத்துவதாக எச்சரிக்கப்படுகிறது.