4 ஆண்டுகள் தான்.. விவாகரத்தை அறிவித்த 'பிக்பாஸ்' டைட்டில் வின்னர் - ரசிகர்கள் அதிர்ச்சி!

Bigg Boss Actors Indian Actress Actress
By Jiyath Jun 09, 2024 07:48 AM GMT
Report

பிக்பாஸ் டைட்டில் வின்னர் பட்டம் பெற்றவர் தனது மனைவியை விவாகரத்து செய்யப்போவதாக அறிவித்துள்ளார். 

சந்தன் -  நிவேதிதா

பிக்பாஸ் கன்னடா சீசன் 5 நிகழ்ச்சியில் டைட்டில் வின்னராக பட்டம் பெற்றவர் சந்தன் ஷெட்டி . இவர் தனது மனைவி நிவேதிதா கவுடாவை விவாகரத்து செய்யப்போவதாக அறிவித்துள்ளார்.

4 ஆண்டுகள் தான்.. விவாகரத்தை அறிவித்த

இவர்கள் இருவரும் கடந்த 2020-ம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இந்நிலையில் 4 ஆண்டுகளில் சந்தன் - நிவேதிதா தம்பதியின் திருமண வாழ்க்கை முடிவுக்கு வந்துள்ளது. 

குஷ்பூ-வை பார்த்த ரஜினி; என்கிட்ட வாய்விட்டு கேட்ட விஷயம் - போட்டுடைத்த வைரமுத்து!

குஷ்பூ-வை பார்த்த ரஜினி; என்கிட்ட வாய்விட்டு கேட்ட விஷயம் - போட்டுடைத்த வைரமுத்து!

ரசிகர்கள் அதிர்ச்சி 

இந்த தகவலை நிவேதிதாவும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உறுதி செய்துள்ளார்.  இது அவர்களது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இசையமைப்பாளரான சந்தன் ஷெட்டி பாடலாசிரியர் மற்றும் பாடகர் ஆவார். 

4 ஆண்டுகள் தான்.. விவாகரத்தை அறிவித்த

இவரது மனைவி நிவேதிதா கவுடா நடிகை மற்றும் மாடலும் ஆவார். இவர்கள் இருவரும், பிக்பாஸ் கன்னடா சீசன் 5 நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போது காதல் மலர்ந்ததை அடுத்து திருமணம் செய்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.