அந்த நடிகை கூட இருந்தப்போ உறுதியாச்சு; விவாகரத்து இதனால் தான் - மனம் திறந்த டிடி!

Tamil Cinema Dhivyadharshini Tamil TV Shows Tamil Actors Tamil Actress
By Jiyath Apr 23, 2024 04:00 PM GMT
Report

தனது விவாகரத்து குறித்து தொகுப்பாளினி திவ்யதர்ஷினி பேசியுள்ளார். 

திவ்யதர்ஷினி

விஜய் டிவியின் பிரபல தொகுப்பாளர்களில் தனக்கென தனி இடத்தை பிடித்தவர் தான் டிடி என்கிற திவ்யதர்ஷினி. இவர் கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக தொகுப்பாளினியாக உள்ளார்.

அந்த நடிகை கூட இருந்தப்போ உறுதியாச்சு; விவாகரத்து இதனால் தான் - மனம் திறந்த டிடி! | Divyadarshini About Her Divorce Experience

குறிப்பாக இவர் தொகுத்து வழங்கிய காபி வித் டிடி நிகழ்ச்சி இவரை இன்னும் பிரபலமாக்கியது. சில தமிழ் படங்களிலும் டிடி நடித்துள்ளார். தற்போது வாரநிகழ்ச்சிகளையும், முக்கிய நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கி வருகின்றார்.

இவர் கடந்த 2014-ம் ஆண்டு ஸ்ரீகாந்த் என்பவரை திருமணம் செய்துகொண்டார். ஆனால் சில வருடங்களிலேயே அவர்களது திருமண வாழ்க்கை விவாகரத்தில் முடிந்தது. நேர்காணல் ஒன்றில் கலந்து கொண்ட டிடி தனது விவாகரத்து குறித்து பேசியுள்ளார்.

23 வருஷம்.. இன்னும் பேசுறது இல்ல - நடிகை தேவயானி வீட்டில் இப்படி ஒரு பிரச்சனையா?

23 வருஷம்.. இன்னும் பேசுறது இல்ல - நடிகை தேவயானி வீட்டில் இப்படி ஒரு பிரச்சனையா?

மகிழ்ச்சியான தருணம்

அவர் கூறியதாவது "விவாகரத்தை நான் எனது வாழ்க்கையில் எதிர்கொண்டிருக்கிறேன். நான் விவாகரத்து ஆன ஒருவர் என்பதை மக்கள் நினைவு வைத்துக்கொள்ளவில்லை. நான்தான் அதை நினைவில் வைத்துக்கொண்டிருக்கிறேன்.

அந்த நடிகை கூட இருந்தப்போ உறுதியாச்சு; விவாகரத்து இதனால் தான் - மனம் திறந்த டிடி! | Divyadarshini About Her Divorce Experience

அந்த விவாகரத்து வாழ்க்கையும் எனக்கு நிறைய விஷயங்களை கற்றுக்கொடுத்தது. அதுவும் எனது வாழ்க்கையில் மகிழ்ச்சியான தருணம்தான். அதேசமயம் விவாகரத்து கஷ்டமாக இருந்ததும் உண்மைதான்.

ரம்யா கிருஷ்ணனை ஒருமுறை பேட்டி எடுக்க சென்றபோதுதான் விவாகரத்து உறுதியானது தெரியவந்தது. எல்லாமே முடிந்துவிட்டது என்று அப்போது உணர்ந்தேன்" என்று தெரிவித்துள்ளார்.