4 ஆண்டுகள் தான்.. விவாகரத்தை அறிவித்த 'பிக்பாஸ்' டைட்டில் வின்னர் - ரசிகர்கள் அதிர்ச்சி!
பிக்பாஸ் டைட்டில் வின்னர் பட்டம் பெற்றவர் தனது மனைவியை விவாகரத்து செய்யப்போவதாக அறிவித்துள்ளார்.
சந்தன் - நிவேதிதா
பிக்பாஸ் கன்னடா சீசன் 5 நிகழ்ச்சியில் டைட்டில் வின்னராக பட்டம் பெற்றவர் சந்தன் ஷெட்டி . இவர் தனது மனைவி நிவேதிதா கவுடாவை விவாகரத்து செய்யப்போவதாக அறிவித்துள்ளார்.

இவர்கள் இருவரும் கடந்த 2020-ம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இந்நிலையில் 4 ஆண்டுகளில் சந்தன் - நிவேதிதா தம்பதியின் திருமண வாழ்க்கை முடிவுக்கு வந்துள்ளது.
ரசிகர்கள் அதிர்ச்சி
இந்த தகவலை நிவேதிதாவும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உறுதி செய்துள்ளார். இது அவர்களது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இசையமைப்பாளரான சந்தன் ஷெட்டி பாடலாசிரியர் மற்றும் பாடகர் ஆவார்.

இவரது மனைவி நிவேதிதா கவுடா நடிகை மற்றும் மாடலும் ஆவார். இவர்கள் இருவரும், பிக்பாஸ் கன்னடா சீசன் 5 நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போது காதல் மலர்ந்ததை அடுத்து திருமணம் செய்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
யாழை சேர்ந்த கர்ப்பிணிப் பெண்ணை நாடு கடத்தும் விவகாரம்! மதுரை உயர் நீதிமன்றின் விசேட தீர்மானம் IBC Tamil
Bigg Boss 10: முதல் குறும்படத்தை போட்டு வெளியேற்றப்பட்ட போட்டியாளர்கள்! அதிரடி காட்டிய விஜய்சேதுபதி Manithan