WTC இறுதிப்போட்டிக்கு இந்தியா செல்லாதா? எஞ்சியுள்ள வாய்ப்புகள் என்ன?
இந்தியா அணி பாக்சிங் டே டெஸ்ட்டில் தோல்வியடைந்ததால் WTC இறுதிப்போட்டிக்கு செல்லும் வாய்ப்பு சிக்கலாகியுள்ளது.
பார்டர்-கவாஸ்கர் தொடர்
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியாவிற்கு இடையே 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட பார்டர்-கவாஸ்கர் தொடர் ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது.
முதல் இரு போட்டிகளில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா தலா ஒரு போட்டிகள் வெற்றி பெற்றுள்ள நிலையில், 3வது டெஸ்ட் போட்டி டிராவில் முடிந்தது.
WTC இறுதிப்போட்டி
இந்நிலையில் மெல்போர்னில் நடந்த 'பாக்சிங் டே டெஸ்ட்' எனப்படும் 4வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 184 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்துள்ளது.
இந்த தோல்வி மூலம் இந்திய அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு செல்லும் வாய்ப்பு சிக்கல் ஆகியுள்ளது. WTC புள்ளிப்பட்டியலில் தற்போது 66.67 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ள தென்னாப்பிரிக்க அணி இறுதி போட்டிக்கான வாய்ப்பை உறுதி செய்துள்ளது.
61.46 புள்ளிகளுடன் ஆஸ்திரேலிய அணி 2வது இடத்திலும், 52.78 புள்ளிகளுடன்இந்திய அணி 3வது இடத்திலும் உள்ளது.
இந்தியாவிற்கு வாய்ப்பு
தற்போதும் இந்திய அணிக்கு சிறிய வாய்ப்புகள் இருந்தாலும், அது இந்திய அணியின் கையில் இல்லை. இந்திய அணி சிட்னியில் நடைபெற உள்ள 5வது டெஸ்ட் போட்டியில் கட்டாயம் வென்றாக வேண்டும். போட்டியில் தோல்வியை தழுவினாலோ அல்லது டிராவில் முடிந்தாலோ இந்தியா அணி WTC இறுதிப்போட்டிகு செல்லாது.
5வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றால் மட்டும் போதாது. அடுத்ததாக ஆஸ்திரேலியா இலங்கைக்கு இடையே நடக்க உள்ள இரு டெஸ்ட் போட்டிகளில் இலங்கை அணி பெற வேண்டும். அல்லது இலங்கை அணி ஒரு போட்டியில் வெற்றி பெற்று ஒரு போட்டி டிராவில் முடிய வேண்டும்.
ஆஸ்திரேலியா அணி இனி ஏதாவது ஒரு போட்டியில் வெற்றி பெற்றாலும் இந்திய அணி இறுதிப்போட்டிக்கு செல்லும் வாய்ப்பை இழந்து விடும்.