தமிழகத்தில் ஐந்து மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் ஹாப்பி நியூஸ்!

Chennai Department of Meteorology Chengalpattu Thiruvallur
By Swetha May 12, 2024 03:56 AM GMT
Report

இந்திய வானிலை ஆய்வு மையம் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக அறிவித்துள்ளது.

 மாவட்டங்கள் 

அதிகமான வெப்பம் தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே கோடை வெயில் சுட்டெரித்து வருகிறது. வெப்பத்தின் தாக்கம் அதிகரிக்கும் எனவும் வானிலை மையம் எச்சரித்துள்ளது. தொடர்ந்து தற்போது வறண்ட வானிலையை நிலவி வருகிறது. குறிப்பாக காலை 9 மணிக்கே வெயில் வாட்டி வதைக்கிறது. வழக்கம்போல் கோடை வெயில் வெளுத்து வாங்குகிறது.

தமிழகத்தில் ஐந்து மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் ஹாப்பி நியூஸ்! | Chance Rain 5 Districts Meteorological Department

அதோடு வழக்கத்துக்கு மாறாக தமிழ்நாட்டின் பல இடங்களில் வெப்பஅலையும் வீச தொடங்கி உள்ளது. இந்த கடும் வெயிலில் நடமாடுவது என்பது உடலுக்கு பிரச்சனையை ஏற்படுத்தலாம். எனவே பொதுமக்கள் நண்பகல் 12 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை வெளியே செல்வதை தடுக்க வேண்டும் என மாவட்ட கலெக்டர்கள் அறிவுரை வழங்கி உள்ளனர்.

சில்லென்று மாறிய சென்னை - திடீரென கொட்டிய கனமழை..!

சில்லென்று மாறிய சென்னை - திடீரென கொட்டிய கனமழை..!

மழை வாய்ப்பு

இந்த நிலையில், இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு ஒன்று வெளியிட்டுள்ளது. அதில், “சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் விழுப்புரம் ஆகிய 5 மாவட்டங்களில் இன்று (12.05.2024) காலை 10 மணி வரை மழைக்கு வாய்ப்பு உள்ளது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் ஐந்து மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் ஹாப்பி நியூஸ்! | Chance Rain 5 Districts Meteorological Department

அதே சமயம் தமிழகத்தில் உள்ள நீலகிரி, கோயம்புத்தூர், தேனி, திண்டுக்கல், விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி ஆகிய 8 மாவட்டங்களின் ஓரிரு இடங்களில் இன்று (12.05.2024) கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.

மேலும் நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், ஈரோடு, நாமக்கல், சேலம், பெரம்பலூர், கரூர், திண்டுக்கல், தேனி, மதுரை விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி உள்ளிட்ட 15 மாவட்டங்களின் ஓரிரு இடங்களில் நாளை (13.05.2024) கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என அறிவித்துள்ளது.