சில்லென்று மாறிய சென்னை - திடீரென கொட்டிய கனமழை..!
காலை முதல் வெயில் வாட்டி வரும் நிலையில், தற்போது சென்னையின் அநேக இடங்களில் மழை பெய்து வருகிறது.
சென்னையில் மழை
தமிழகத்தின் தலைநகரான சென்னையில் கிண்டி, ஆலந்தூர், போரூர், வளசரவாக்கம், அசோக் நகர், கோயம்பேடு, ராமாபுரம் போன்ற பகுதிகளில் திடீரென மழை பெய்ய துவங்கியுள்ளது.
கடந்த ஒரு வாரமாகவே வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்து வரும் நிலையில், சென்னை வானிலை ஆய்வு மையம் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தகவல் அளித்திருந்தனர்.
அதனை தொடர்ந்து நேற்று மாலை திருவள்ளூர் பகுதிகளில் மழை பெய்ததாலும், சென்னையில் வெயிலே வாட்டி வந்தது. தற்போது மழை பெய்து வருவதால் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
சென்னை மற்றும் புறநகரைப் பொறுத்தவரை இன்றும் நாளையும் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிகபட்சமாக 37 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையும், குறைந்தபட்சமாக 27 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையும் பதிவாகும் என்று கூறப்பட்டுள்ளது.