தமிழகத்தில் 3 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் தகவல்!

Tamil nadu TN Weather Weather
By Jiyath Jan 31, 2024 06:32 AM GMT
Report

தமிழகத்தில் இன்று முதல் பிப். 2-ம் தேதி வரை மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

லேசான மழை

சென்னை மண்டல வானிலை ஆய்வு மைய இயக்குநர் பா.செந்தாமரைக்கண்ணன் வெளியிட்ட செய்திக்குறிப்பில் "கிழக்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக இன்று  தமிழகம், புதுச்சேரி மாநிலங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும்.

தமிழகத்தில் 3 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் தகவல்! | Chance Of Rain In Tamilnadu For 3 Days

உள்தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் அதிகாலை நேரத்தில் லேசான பனிமூட்டத்துக்கு வாய்ப்புள்ளது. குறிப்பாக, நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் இரவு அல்லது அதிகாலை நேரத்தில் உறைபனி ஏற்பட வாய்ப்புள்ளது.

இனி வாரத்தில் 4 நாள் வேலை செஞ்சா போதுமாம் - அறிமுகப்படுத்தப்படும் அதிரடி திட்டம்!

இனி வாரத்தில் 4 நாள் வேலை செஞ்சா போதுமாம் - அறிமுகப்படுத்தப்படும் அதிரடி திட்டம்!

வறண்ட வானிலை

தமிழகம், புதுச்சேரி மாநிலங்களில் பிப். 1, 2-ம் தேதிகளில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். பிப்.3 முதல் 5-ம் தேதி வரை வறண்ட வானிலை நிலவக்கூடும்.   

தமிழகத்தில் 3 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் தகவல்! | Chance Of Rain In Tamilnadu For 3 Days

மேலும், சென்னையில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 86-87.8 டிகிரி பாரன்ஹீட், குறைந்தபட்ச வெப்பநிலை 73.4-75.2 டிகிரிபாரன்ஹீட் அளவில் இருக்கும்.