அடுத்த 3 மணி நேரத்திற்கு வெளுத்து வாங்க போகும் மழை - காயப்போட்ட துணி கவனம்!
அடுத்த 3 மணி நேரத்திற்கு 11 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மழைக்கு வாய்ப்பு
கடந்த சில வாரங்களவே பரவலாக விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. குறிப்பாக தலைநகர் சென்னையில் பகல் நேரத்தில் வெப்பத்தின் தாக்கம் சற்று அதிகமாக இருப்பதும் மாலை நேரத்தில் திடீரென மழை பெய்தும் வருகிறது.
இந்நிலையில், திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, திருவள்ளூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், திண்டுக்கல், கன்னியாகுமரி மற்றும் திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு இடி,
அலெர்ட்..
மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதேபோல் சென்னையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசான அல்லது மிதமான மழை பெய்யும் என்றும் தெரிவித்துள்ளது.
தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த 6 நாட்களுக்கு அதாவது நாளை முதல் வரும் 5 ஆம் தேதி வரை மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.