சுரங்கப்பாதையில் தேங்கிய மழை நீரில் சிக்கிய கார் - செய்வதறியாது திகைத்த குடும்பம்..!

Chennai TN Weather Weather
By Thahir Jun 19, 2023 05:32 AM GMT
Report

சென்னையில் நேற்று இரவு முதல் கனமழையானது தொடர்ந்து விடாமல் பெய்து வருகிறது.

சுரங்கத்தில் சிக்கிய கார் 

தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவும் மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்து வருகிறது.

சென்னையில் நேற்று இரவு முதல் கனமழையானது விட்டு விட்டு பெய்து வருகிறது. இந்த நிலையில் கத்திபாரா சதுக்கம் சுரங்கப்பாதையில் மழை நீர் அதிகளவில் தேங்கியது.

சுரங்கப்பாதையில் தேங்கிய மழை நீரில் சிக்கிய கார் - செய்வதறியாது திகைத்த குடும்பம்..! | A Car Stuck In Standing Rain Water In The Tunnel

இந்த சுரங்க பாதையில் கார் ஒன்று சென்ற நிலையில் தேங்கிய மழை நீரில் சிக்கியது. இதனால் அந்த காரில் பயணம் செய்த குடும்பத்தினர் மற்றும் ஓட்டுநர் ஆகியோர் சிக்கினர். சிக்கிய காரை மீட்கும் பணியில் தீணைப்புத்துறையினர் ஈடுபட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.