கொட்டப்போகும் கனமழை; எங்கெல்லாம் பெய்யும் - முக்கிய அறிவிப்பு!
5 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கனமழை
சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பா.செந்தாமரைக்கண்ணன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், தென் தமிழக பகுதிகளின் மேல்நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக
தமிழ்நாடு, புதுச்சேரி மாநிலங்களில் இன்றும், நாளையும், (அக். 15, 16) சில இடங்களிலும், வரும் 17, 18-ம் தேதிகளில்ஓரிரு இடங்களிலும் இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
இங்கெல்லாம் வாய்ப்பு
வரும் 19, 20-ம் தேதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். இன்று கோவை மாவட்டத்தின் மலைப் பகுதிகள், தேனி, திண்டுக்கல், திருப்பூர், நீலகிரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
வரும் 17-ம் தேதி மேற்கூறிய மாவட்டங்கள் மற்றும் தூத்துக்குடி, ராமநாதபுரம், சிவகங்கை, மதுரை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
வரும் 18-ம் தேதி கோவை மாவட்ட மலைப் பகுதிகள் மற்றும் நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்தில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய, லேசான மழை பெய்யக்கூடும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.