திருமணமாகி 2 மாதங்கள் தான் ஆச்சு.. சோபிதா துலிபா எடுத்த திடீர் முடிவு - அதிர்ச்சி தகவல்!
திருமணத்துக்குப் பிறகு சோபிதா துலிபாலா முக்கிய முடிவுகளை எடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது.
சோபிதா
தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் நாக சைதன்யா கடந்த 2017ஆம் ஆண்டு நடிகை சமந்தாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இவர்களின் திருமணம் கோவாவில் மிகவும் பிரம்மாண்டமாக நடைபெற்றது.
அதன்பிறகு 4 ஆண்டுகளில் கருத்து வேறுபாடு காரணமாக 2021ஆம் ஆண்டு இருவரும் பிரிந்தனர். இதற்கிடையே, நாக சைதன்யா - சமந்தா பிரிந்து தனியே வாழ்ந்து வந்த நிலையில், நடிகை சோபிதா துலிபாலாவை நாக சைதன்யா காதலித்து வந்தார்.
இதனையடுத்து, இரு வீட்டார் சம்மதத்துடன் கடந்த ஆண்டு டிசம்பர் 4-ம் தேதி திருமணம் நடைபெற்றது.திருமணத்திற்குப் பிறகு நாக சைதன்யா நடிப்பில் வெளியான ‘தண்டேல்’ திரைப்படம் வெளியாகி ரூ.100 கோடி வசூலைக் குவித்து வருகிறது.
திடீர் முடிவு
இதைத் தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் நடிக்க நாக சைதன்யா ஒப்பந்தமாகியுள்ளார்.அதேபோல் சோபிதா துலிபாலாவும் படங்களில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.இந்த சூழலில், சமீபகாலமாக சோபிதா துலிபாலா கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகளில் உடையில் மாற்றம் செய்துள்ளார்.
இந்த நிலையில், திருமணத்திற்குப் பிறகு முக்கிய முடிவுகளை எடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது. அந்த வகையில், நெருக்கமான காதல் காட்சி மற்றும் கவர்ச்சியான வேடங்களில் நடிக்க மாட்டார் எனத் தகவல் வெளியாகியுள்ளது.