திருமணதுக்கு முன்பு சோபிதாவிடம் சைதன்யா போட்ட ஒரே கண்டீஷன் - அவரே சொன்ன தகவல்!
நாக சைதன்யா, நடிகை சோபிதாவுக்கு போட்ட நிபந்தனை பற்றிய தெரியவந்துள்ளது.
ஒரே கண்டீஷன்
நடிகை சமந்தாவும் நடிகைர் நாக சைதன்யாவும் பல வருடமாக காதலித்து வந்த நிலையில் கடந்த 2017 ஆம் ஆண்டு இரு குடும்பத்தாரின் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டனர். ஆனால் 2021 ஆம் ஆண்டு இருவரும் பிரிவதாக அறிவித்து ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தினர்.
இதனையடுத்து, நாக சைதன்யா நடிகை சோபிதா தூலிபாவை இரண்டாம் திருமணம் செய்தார். இதற்கான திருமண நிகழ்ச்சி ஹைதராபாதில் நடைபெற்றது. இதில் மிகவும் நெருக்கமான குடும்பத்தினர் மட்டுமே கலந்து கொண்டனர்.
இதை தொடர்ந்து டிசம்பர் 8-ஆம் தேதி சோபிதா - நாக சைதன்யா திருமணம் நடந்தது. தங்களின் திருமணத்தை மிகவும் பிரைவேட்டாக நடத்த விரும்பிய இருவரும் 200 பேருக்கு மட்டுமே அழைப்பு விடுத்ததாக செய்திகள் வெளியானது. இவர்களுக்கு திருமணம் ஆன பின்னர்,
தகவல்
அடுத்தடுத்து பல சுவாரஸ்ய தகவல்கள் வெளியாகி வருகிறது. அந்த வகையில், தற்போது திருமணத்திற்கு முன்னர் நாக சைதன்யா சோபிதாவுக்கு போட்ட முக்கிய கண்டீஷன் பற்றிய தகவல் வெளியாகியுள்ளது. சமீபத்தில் கொடுத்த பேட்டி ஒன்றில் இது குறித்து சோபிதா பேசியுள்ளார்.
நாகர்ஜுனா குடும்பம் ஒரு தெலுங்கு குடும்பம் என்றாலும், அவர்கள் தாய் மொழியை மிகவும் குறைந்த அளவிலேயே பேசுகிறார்களாம். அமலா பெரும்பாலும் ஆங்கிலத்தில் தான் தன்னுடைய மகன் அகிலுடன் பேசுகிறார்.
அகிலும் அமெரிக்காவில் பிறந்தவர் என்பதால், ஆங்கிலத்தில் பேசுவதையே வழக்கமாக இருந்துள்ளது. அதனால் நாக சைதன்யாவுக்கு குடும்பத்தில் யாருடனும் அதிகம் தெலுங்கில் பேச வாய்ப்பு கிடைக்கவில்லையாம்.
சோபிதா தெலுங்கு நன்கு பேசுபவர் என்பதால், திருமணத்திற்கு முன்பே அவர் வீட்டில் இருக்கும் போது தெலுங்கில் தான் பேச வேண்டும் என்கிற கண்டீஷன் போட்டு திருமணம் செய்து கொண்டாராம். சோபிதாவும் இந்த அன்பு கட்டளையை ஏற்று ஆங்கிலத்தை தவிர்த்து தெலுங்கில் பேசி வருகிறாராம்.