சாலையோரம் சென்ற பெண்ணிடம் நகை பறிக்க முயற்சி - காரில் வந்த மர்ம நபர்கள் கைது!

Coimbatore Crime
By Vinothini May 16, 2023 10:29 AM GMT
Report

கோவையில் சாலையோரம் நடைபயணம் மேற்கொண்ட பெண்ணிடம் காரில் வந்து நகை பறிக்க முயன்ற இருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

நகை பறிப்பு 

கோவை, பீளமேடு ஹட்கோ காலணி பகுதியை சேர்ந்தவர் கவுசல்யா, 38 வயதான இவர் வழக்கமாக தனது கணவருடன் நடைபயிற்சிக்குச் செல்வது வழக்கம்.

கணவர் வெளியூர் சென்ற நிலையில் இன்று காலை 6.30 மணியளவில் கவுசல்யா மட்டும் தனியாக நடைபயற்சிக்கு சென்றுள்ளார்.

தொடர்ந்து, ஜி.வி.ரெசிடென்ஸி அருகே அவர் நடந்து வந்த போது, பின்னால் நம்பர் பிளேட் இல்லாத வாடகை காரில் வந்த மர்ம நபர்கள் இவர் கழுத்தில் அணிந்திருந்த செயினை பறிக்க முயன்றனர்.

அப்போது அவர் செயினை இறுக்கமாக பிடித்துக் கொண்டதால் காரில் சிறிது தூரம் இழுத்துச் செல்லப்பட்டு, நல்வாய்ப்பாக கார் சக்கரத்தில் சிக்காமல் உயிர் தப்பினார்.

மர்ம நபர்கள் கைது

இந்நிலையில், அங்கு உள்ள சிசிடிவியில் இந்த சம்பவம் பதிவாகி இருந்தது. தற்பொழுது இந்த காட்சி சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.

chain-snatch-in-coimbatore-police-arrested-them

இதனை வைத்து சிங்காநல்லூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

மேலும், போலீசார் சம்மந்தப்பட்ட நபரான அபிஷேக் மற்றும் சக்திவேல் ஆகிய இருவரையும் கைது செய்துள்ளனர்.

இந்த சம்பவம் கோவையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.