நீச்சல் குளத்தில் ஆண் நண்பருடன் நெருக்கம் - வைரல் சாஹல் மனைவி வீடியோ!! அதிர்ச்சியில் ரசிகர்கள்

Karthick
in கிரிக்கெட்Report this article
கிரிக்கெட்டர் சஹாலின் மனைவி தனஸ்ரீ வர்மா சமூகவலைத்தளங்களில் பிரபலமாக இருந்து வருகின்றார்.
சஹால்
இந்திய கிரிக்கெட் அணியில் சுழற்பந்து வீச்சாளர்களில் இன்றைய தலைமுறையில் தனக்கென தனி இடத்தை உண்டாக்கியுள்ளார் யூஸ்வேந்தர் சஹால். 2011-ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணியில் அறிமுகமான அவர், அத்தொடரில் ஒரே ஒரு போட்டி மட்டுமே விளையாடினார்.
ஆனால், 2014-ஆம் ஆண்டு பெங்களூரு அணியில் இணைந்த அவர், தொடர்ந்து தனது அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். ஐபிஎல்'லில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதன் காரணமாக இந்திய அணியில் அவருக்கு 2016-ஆம் ஆண்டு இடம் கிடைத்தது. ஜிம்பாபே அணிக்கு எதிராக டி20 மற்றும் ஒருநாள் போட்டியில் இந்திய அணிக்காக அறிமுகமாகினார் சஹால்.
டி20 தொடரில் இந்திய அணிக்காக முதல் 5 விக்கெட் வீழ்த்திய வீரர் என்ற சிறப்புடைய சஹால், உலக டி20 வரலாற்றில் ஒரு போட்டியில் அதிக விக்கெட் வீழ்த்திய வீரர் என்ற பெருமையையும் கொண்டுள்ளார். இங்கிலாந்து அணிக்கு எதிராக 2017 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் நடைபெற்ற போட்டியில் சாஹல், 25 ரன்களை விட்டுக்கொடுத்து 6 விக்கெட்டை வீழ்த்தியுள்ளார்.
தற்போது ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் அணிக்காக விளையாடி வரும் அவர், ஐபிஎல்'லில் 200 விக்கெட் வீழ்த்திய முதல் பந்துவீச்சாளர் என்ற பெருமையை அண்மையில் நிகழ்த்தினார்.
சாஹல், கடந்த 2020 ஆம் ஆண்டு பிரபல யூடியூபர், பல் மருத்துவர், நடன இயக்குனர் என பன்முக தன்மை கொண்ட தனஸ்ரீ வர்மா என்பவரை மணந்துகொண்டார்.
தனஸ்ரீ வர்மா சமூகவலைத்தளங்களில் பெரும் பிரபலமாக திகழ்கிறார். நடனமாடுவது, ரீலிஸ் வீடியோ போடுவது என இவரும் ஆக்ட்டிவாக செயல்படுகிறார். அண்மையில் இவர் தனது ஆண் நண்பருடன் நீச்சல் குள்ளத்தில் இருக்கும் புகைப்படம் சமூகவலைத்தளத்தில் பரவி பெரும் வைரலானது.
பலரும் தனஸ்ரீ வர்மாவை விமர்சித்து கருத்துக்களை பதிவிட்ட நிலையில், தற்போது அதிலிருக்கும் உண்மை வெளிவந்துள்ளது. அதாவது அப்புகைப்படத்தில் இருப்பது தனஸ்ரீ வர்மாவே இல்லை. அவரை போலவே இருக்கும் இந்தி சீரியல் நடிகையான சுரபி சந்தனா.

இந்த ராசியில் பிறந்தவர்கள் புலி போல் பதுங்கி இருந்து வேலைப்பார்ப்பார்களாம்.. நீங்க என்ன ராசி? Manithan
