இந்திய அணியில் இடமில்லை தான் போல?? சைலெண்டாக உறுதிப்படுத்திய ரோகித்
இந்திய அணியின் உலகக்கோப்பை டி 20 தொடருக்கான ப்ரோமோ வெளியாகியுள்ளது.
உலகப்கோப்பை
இந்தியா அணி உலக கோப்பையை வென்று 13 ஆண்டுகள் நிறைவடைந்து விட்டது. கடைசியாக உலக கோப்பையை தோனி தலைமையிலான இந்திய அணி 2011-ஆம் ஆண்டில் வென்றிருந்தது. அதனை தொடர்ந்து, நடந்து முடிந்த உலகக்கோப்பை ஒரு நாள் தொடர் இறுதிபோட்டி, டெஸ்ட் உலகக்கோப்பை இறுதி போட்டியில் தோல்வியடைந்த இந்தியா அணி, தற்போது டி20 கோப்பையை குறிவைத்துள்ளது.
ஜூன் 1-ஆம் தேதி முதல் 29-ஆம் தேதி வரை வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்கா நாடுகளில் இந்த தொடர் நடைபெறவுள்ளது. இன்னும், இந்திய அணியின் டீம் தேர்வு செய்யப்படவில்லை. நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரில் சிறப்பாக விளையாடும் வீரர்கள் கொண்ட அணியை உலகக்கோப்பை தொடருக்கு அனுப்ப, அணி நிர்வாகம் முடிவெடுத்துள்ளது.
அதன் காரணமாக, அணி ஐபிஎல் தொடருக்கு பிறகு தான், அறிவிக்கப்படும் என தகவல் வெளிவந்துள்ளது. இது ஒரு புறம் இருக்க, விராட் கோலி இந்த தொடரில் வேண்டாம் என சில கருத்துக்கள் வெளியாகி பெரும் எதிர்ப்புகளை எதிர்கொண்டது. அணியின் நட்சத்திர வீரரான அவரை வெளியேற்றுவது அணிக்கு தான் பின்னடைவு என பலரும் கருத்துக்களை தெரிவித்து வந்தனர்.
அதே போல, மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடி வரும் ஹர்திக் பாண்டியா மற்றும் இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா ஆகியோருக்கு இடையே உரசல் இருப்பதாகவும் கூறப்பட்டு, இந்திய அணியில் ஹர்திக் பாண்டியாவிற்கு இடம் கிடைக்காது என்றெல்லாம் பேசப்பட்டது. இந்நிலையில் தான், அண்மையில் டி 20 தொடருக்கான இந்தியா அணி ப்ரோமோ வீடியோ வெளியாகியுள்ளது.
அதில், விராட், சூர்யகுமார் யாதவ், ஜடேஜா, ஹர்திக் பாண்டியா மற்றும் ரோகித் சர்மா ஆகியோர் இடம்பெற்றுள்ள நிலையில், இவர்களுக்கு நிச்சயமாக அணியில் உள்ளார்கள் என ரசிகர்கள் பேசத்துவங்கிவிட்டனர். ஆனால், இந்தியா அணியின் விக்கெட் கீப்பர் யார் என்பது என்பது பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஐபிஎல் தொடரில் இந்தியா அணிக்காக விளையாடும் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன்களான இஷான் கிஷன், கே.எல்.ராகுல், ரிஷப் பண்ட், சஞ்சு சாம்சன், தினேஷ் கார்த்திக் என அனைவருமே சிறப்பான ஃபார்மை வெளிப்படுத்தி வருகிறார்கள். இவர்களில் யார் இடம்பெறுவார் என்பதை தேர்வு செய்வது பெரும் சிக்கலான ஒன்றாக தற்போது அணி நிர்வாகத்திற்கு மாறியுள்ளது.
இதில், ஓப்பனர்களாக விராட் மற்றும் ரோகித் களமிறங்குவார்கள் என எதிர்பார்க்கப்படும் நிலையில், இந்திய அணியில் மிடில் ஆர்டர் யார் என்பது தான் கேள்விக்குறியாக இருக்கிறது. அதே நேரத்தில் பினிஷராக யார் இந்திய அணிக்காக செயல்படுவார்கள் என்ற கேள்வியும் உள்ளது. அதில் ஹர்திக் பாண்ட்யாவின் ஃபார்ம் கேள்விக்குறியாகவே உள்ளது குறிப்பிடத்தக்கது.
INDIAN TEAM PROMO FOR THE T20I WORLD CUP. ??
— Johns. (@CricCrazyJohns) April 23, 2024
- Rohit Army is ready to create history.pic.twitter.com/2jjM9wYQQW