மக்களே கவனம் - குழந்தைகளுக்கு கொடுக்கும் cerelac ல் அதிக சர்க்கரையா? நெஸ்லே விளக்கம்!

Nestlé India Switzerland Junk Food
By Swetha Apr 30, 2024 11:57 AM GMT
Report

பிரபல நெஸ்லே நிறுவனம் குழந்தைகளுக்கு கொடுக்கும் cerelac குறித்து விளக்கமளித்துள்ளது.

 cerelac ல் சர்க்கரை

உலகளவில் மிகவும் பிரபலமான நெஸ்லே நிறுவனத்தின் குழந்தைகளுக்கான ஊட்டச்சத்து உணவான செர்லாக்கில் இரட்டைத் தரம் இருப்பதாக கண்டறியப்பட்டது. பெரும்பாலும் வீட்டில் உள்ள குழந்தைகளுக்கு ஊட்டச்சத்துக்காக செர்லாக் கொடுப்பார்கள்.

மக்களே கவனம் - குழந்தைகளுக்கு கொடுக்கும் cerelac ல் அதிக சர்க்கரையா? நெஸ்லே விளக்கம்! | Cerelac Has Sugar Nestle Proves

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி உண்ணும் ஊட்டச்சத்துப் பொருளான செர்லாக்கில் அடிக்கடி உண்ண வைக்கும் அடிக்டிவ் சுகர் எனப்படும் சுவைக்கு அடிமையாகும் உப்புக்கள் சேர்க்கப்படுவதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகியிருக்கிறது.

செர்லாக்கின் தாய் நிறுவனமான நெஸ்லே சுவிட்சர்லாந்தை தலைமையாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில், சர்வதேச குழந்தை உணவுகளுக்கான நடவடிக்கை அமைப்பு என்ற புலனாய்வு நிறுவனம், நெஸ்லேவின் செர்லாக்கை எடுத்து ஆய்வு செய்திருக்கிறது.

’மேகி நூடுல்ஸ்' கேடானது: ஒப்புக் கொண்டது நெஸ்லே நிறுவனம்!  அதிர்ச்சியில் பொதுமக்கள்..!

’மேகி நூடுல்ஸ்' கேடானது: ஒப்புக் கொண்டது நெஸ்லே நிறுவனம்! அதிர்ச்சியில் பொதுமக்கள்..!

நெஸ்லே விளக்கம்

அதன்படி, ஐரோப்பா மற்றும் பிரிட்டனில் விற்கப்படும் செர்லாக்கில் உடலுக்குக் கேடு விளைவிக்கும் அடிக்டிவ் சுகர் எதுவும் கலக்கப்படாமல் விற்கப்படுவதாக கூறப்பட்டது. இருப்பினும், இந்தியா மற்றும் கிழக்காசிய நாடுகளில் செர்லாக்கில் ஆபத்தை ஏற்படுத்தும் அடிக்டிவ் சுகர்கள் கலக்கப்படுவதாகவும் ஆய்வுகள் தெரிவித்தது.

மக்களே கவனம் - குழந்தைகளுக்கு கொடுக்கும் cerelac ல் அதிக சர்க்கரையா? நெஸ்லே விளக்கம்! | Cerelac Has Sugar Nestle Proves

குழந்தைகள் அடிக்டிவ் சுகர் உட்கொண்டால் உடல் உபாதைகள் அதிகம் வர வாய்ப்பிருப்பதாக எச்சரித்தனர்.மேலும், நெஸ்லே மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளது. ஆனால், நெஸ்லே தரப்பிலிருந்து இதுகுறித்து விளக்கம் அளித்துள்ளதாக தெரியவந்துள்ளது.

அதாவது, 18 மாதங்களுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கான செர்லாக்-ஐ சர்வ்தேச தரத்தில் தான் தயாரித்து வருகிறோம், சர்வதேச அளவில் நிர்ணயிக்கப்பட்ட சர்க்கரை அளவே தான் இதில் சேர்க்கப்படுகிறது. தொடர்ச்சியாக இந்த குற்றசாட்டுகள் வருவது துரதிர்ஷ்டவசமானது என நெஸ்லே நிறுவனம் விளக்கமளித்துள்ளது.