ஆசையாக வேலைக்கு சேர்ந்த இளைஞர்..1மணி நேரத்தில் தூக்கிய CEO - இது ஒரு காரணமா?
இளைஞர் சேர்ந்த 1 மணி நேரத்தில் வேலையை விட்டு தூக்கிய சம்பவம் அரங்கேறியுள்ளது.
1மணி நேரத்தில்..
அமெரிக்காவில் செயல்ப்பட்டு வரும் ஒரு நிறுவனத்தில் தலைமை செயல் அதிகாரியாக பால்ட்வின் என்ற நபர் இயங்கி வருகிறார். இவர் அன்றைய நாள் காலையில் ஒரு ஆலோசனை குழு நடத்தப்போவதாக ஊழியர்களுக்கு மின்னஞ்சலில் அழைப்பு விடுத்துள்ளார்.
முன்கூட்டியே அழைப்புவிடுத்திருந்தும் அந்த கூட்டத்திற்கு 11 பேர் மட்டுமே இணையம் வாயிலாக கலந்துகொண்டுள்ளனர். மொத்தமாக 110 ஊழியர்களை கொண்டுள்ள இந்த நிறுவனத்தில் வெறும் 11 பேர் பங்கேற்றதால் கடும் ஆத்திரமடைந்த தலைமை செயல் அதிகாரி,
இளைஞர்
மீதமுள்ள 99 பேருக்கும் பணி நீக்கம் செய்த சம்பவம் அரங்கேறியுள்ளது. இந்த நிலையில், இதில் ஒருவர் தான் வேலைக்கு சேர்ந்த ஒரு மணி நேரத்தில் வேலையை விட்டு தூக்கப்பட்டதாக சமூக வலைத்தளத்தில் புலம்பி தள்ளியுள்ளார்.
அவரது அந்த பதிவில், தான் இன்டர்ன்ஷிப்க்கு சேர்ந்த 1 மணி நேரத்தில் நிறுவனத்தின் சிஇஓ தன்னுடன் சேர்த்து 99 பேரை பணி நீக்கம் செய்து விட்டார் என்று குறிப்பிட்டுள்ளார். அதாவது நிறுவனத்தில் அன்றைய தினம் 111 பேரை மீட்டிங்கிற்கு சிஇஓ அழைத்துள்ளார், ஆனால் 11 பேர் மட்டுமே மீட்டிங்குக்கு வந்துள்ளனர்.
இதனால் கடுங்கோபமடைந்த சிஇஓ அனைவரையும் அதிரடியாகத் தூக்கினார். ஆனால் தனக்கு இந்த மீட்டிங் குறித்து எதுவும் தெரிவிக்கப்படவில்லை என்று அந்த ஒரு மணி நேரத்தில் வேலை இழந்தவர் மிகவும் நொந்துப்போய் புலம்பி வருகிறார்.