வீடு கட்ட ரூ.1 லட்சம் மானியம்; மத்திய அரசு திட்டம் - எப்படி விண்ணப்பிப்பது?
வீடு கட்ட மானியம் வழங்கும் திட்டம் குறித்த தகவலை இப்பதிவில் காணலாம்.
வீடு கட்ட மானியம்
மத்திய அரசின் பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா (PMAY) என்ற அரசாங்க வீட்டுக் கடன் திட்டம் ஜூன் 2015-ல் தொடங்கப்பட்டது. இந்த திட்டத்தின் கீழ் நாட்டின் அனைத்து ஏழை குடிமக்களுக்கும் மலிவு விலையில் வீடுகளை வழங்குகிறது.
இந்திய அரசு குடிசைப் பகுதிகளில் வீடுகள் கட்டுவதற்கு ஒரு வீட்டிற்கு 1 லட்சம் ரூபாய் மானியம் வழங்குகிறது. வீட்டுக் கடனும் எடுக்கலாம். இதில் 6.5% வரை வட்டி மானியம் பெறலாம். கடனை 20 ஆண்டுகளில் திருப்பிச் செலுத்தலாம். பயனாளிகள் ஏற்கனவே சொந்தமாக வீடு வைத்திருக்கக் கூடாது.
பெண்களுக்கு அதிக முன்னுரிமை வழங்கப்படும். விண்ணப்பதாரர்கள் இந்தியராக இருக்க வேண்டும். மேலும், இந்திய அரசு அல்லது மாநில அரசின் எந்தவொரு வீட்டுத் திட்டத்தின் பலனையும் பெற்றிருக்கக் கூடாது. பயனாளியின் ஆண்டு வருமானம் ரூ.6 லட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும்.
எப்படி விண்ணப்பிப்பது?
இந்த திட்டத்திற்கு விண்ணப்பிக்க ஆதார் அட்டை, வருமான சான்றிதழ், வயது சான்றிதழ், மொபைல் எண், வங்கி பாஸ்புக், பாஸ்போர்ட் அளவு புகைப்படம் ஆகியவை தேவை. பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனாவின் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் செல்ல வேண்டும் ( https://pmaymis.gov.in/ ).
முகப்பு பக்கத்தில், குடிமக்கள் மதிப்பீடு விருப்பத்தை கிளிக் செய்து, பின்னர் விண்ணப்பிக்க வேண்டும். பூர்த்தி செய்யப்பட்ட படிவத்தை ஆன்லைனில் பதிவிறக்கம் செய்த பிறகு,
உங்கள் அருகிலுள்ள மீ சேவா கேந்திரா, பொது சேவை மையம் அல்லது நிதி நிறுவனம்/வங்கிக்கு சென்று அதற்கான ஆவணங்களுடன் படிவத்தை சமர்ப்பிக்க வேண்டும்.