1,500 பழங்குடியினர் குடும்பங்களுக்கு வீடு கட்ட ரூ.79 கோடி நிதி ஒதுக்கீடு - தமிழ்நாடு அரசு!

Tamil nadu Government of Tamil Nadu
By Jiyath Sep 03, 2023 05:51 AM GMT
Report

தமிழகத்தில் 1,500 பழங்குடியினர் குடும்பங்களுக்கு வீடுகள் கட்டுவதற்கு ரூ.79.28 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

நிதி ஒதுக்கீடு 

தமிழக சட்டப்பேரவையில் 2023-24 நிதியாண்டுக்கான மானியக் கோரிக்கையின் மீது ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் என்.கயல்விழி செல்வராஜ் பேசும்போது, பொருளாதாரத்தில் பின்தங்கிய வீடற்ற 1,000 பழங்குடியினர் குடும்பங்கள் மற்றும்

1,500 பழங்குடியினர் குடும்பங்களுக்கு வீடு கட்ட ரூ.79 கோடி நிதி ஒதுக்கீடு - தமிழ்நாடு அரசு! | Build Houses For 1500 Tribal Families In Tamilnadu

தற்போது பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ள 500 நரிக்குறவர் குடும்பங்கள் என மொத்தம் 1,500 குடும்பங்களுக்கு ரூ.45 கோடி மதிப்பீட்டில் தகுதியின் அடிப்படையில் வீடுகள் கட்டித் தரப்படும் என அறிவித்தார்.

வீடுகள் 

அந்த அறிவிப்பினை செயல்படுத்தும் வகையில், 2023-24-ம் ஆண்டில் 1,500 பழங்குடியினர்களுக்கு தமிழகத்தில் 19 மாவட்டங்களில் வீடுகள் கட்டுவதற்கு ரூ.79 கோடியே 28 லட்சத்து 40 ஆயிரம் நிதி ஒதுக்கீடு செய்து ஆணை வெளியிடப்பட்டுள்ளது.

1,500 வீடுகளை விரைந்து கட்டி முடிக்கத் தேவையான நடவடிக்கை விரைவில் மேற்கொள்ளப்படும் என அமைச்சர் என்.கயல்விழி செல்வராஜ் தெரிவித்துள்ளார்.