சென்னை முழுவதும் பறக்கும் அமைச்சர்கள் வழக்கு பட்டியல் போஸ்டர் - பழிவாங்கிய திமுக!

Tamil nadu BJP R. N. Ravi
By Vinothini Jun 30, 2023 05:40 AM GMT
Report

பாஜக அமைச்சர்களில் வழக்கு பட்டியலை போஸ்டர் போட்டு ஒட்டியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

செந்தில் பாலாஜி

அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்குத்துறையால் கைது செய்யப்பட்டு, பின்னர் நெஞ்சு வழியால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இவர் தற்போது சிகிச்சை முடிந்து மருத்துவக்குழுவின் கண்காணிப்பில் உள்ளார்.

central-ministers-case-posters

அவர் மீது சட்ட விரோத பணப் பரிமாற்றம், வேலைக்குப் பணம் பெற்றதாக வழக்குகள் உள்ளன என்பதைச் சுட்டிக்காட்டி செந்தில் பாலாஜியை அமைச்சரவையிலிருந்து நீக்குவதாகத் தமிழக ஆளுநர் மாளிகை அறிக்கை ஒன்றை நேற்று மாலை வெளியிட்டு இருந்தது. பின்னர் திமுகவினர் அமைச்சரை தன்னிச்சயாக நீக்கும் அதிகாரம் ஆளுநருக்கு இல்லை என்று கூறினார்.

போஸ்டர்

இந்நிலையில், ஆளுநர் அமைச்சர் செந்தில் பாலாஜியின் பதவி நீக்குவதை நிறுத்தி வைத்திருப்பதாக முதலமைச்சரிடம் தெரிவித்துள்ளார். முன்னதாக செந்தில் பாலாஜி பதவி நீக்கம் குறித்த ஆளுநரின் அறிவிப்பை கண்டித்து சென்னையின் பல்வேறு இடங்களில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.

central-ministers-case-posters

அதில், தற்போது மத்திய அமைச்சரவை பட்டியலில் இருக்கக்கூடியவர்களில் 77 பேரில் 34 பேர் மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருப்பதாகவும், எந்தெந்த அமைச்சர்கள் மீது எத்தனை வழக்குகள் தற்போது நிலுவையில் இருக்கின்றன என்கின்ற தகவலோடு சென்னையின் பிரதான இடங்களில் ஒட்டியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.