தமிழகம் என்றாலே செங்கோல் தான் நினைவுக்கு வரும் - மத்திய அமைச்சர் பேச்சு!
தமிழ்நாட்டிற்கு வருகை தந்த மத்திய அமைச்சர் மோடி குறித்து பேசியுள்ளார்.
பொதுக்கூட்டம்
பிரதமர் மோடியின் 9 ஆண்டு கால ஆட்சியின் சாதனைகளை விளக்கும் பொதுக்கூட்டம் இன்று மாலை சென்னையில் நடந்தது.
இந்த மாபெரும் பொதுக்கூட்டத்தில் மத்திய பாதுகாப்பு அமைச்சர் திரு ராஜ்நாத் சிங், பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை மற்றும் மாநில, மாவட்ட நிர்வாகிகள் கலந்துகொண்டனர். இதில் மத்திய ராணுவ துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் செங்கோல் குறித்து பேசியுள்ளார்.
மத்திய அமைச்சர்
இதனை தொடர்ந்து, அவர் பேசுகையில், " இன்று தமிழகம் என்றாலே செங்கோல் என்ற வார்த்தைதான் அனைவரின் நினைவுக்கும் வரும். இரண்டு மாதங்களுக்கு முன்பு, தமிழ்நாட்டிற்கு வெளியே யாருக்கும் செங்கோல் என்ற வார்த்தை தெரிந்திருக்க வாய்ப்பில்லை.
Addressing a public meeting in Chennai.
— Rajnath Singh (@rajnathsingh) June 20, 2023
https://t.co/F2RsPhAWXa
ஆனால் இன்று அனைவருக்கும் அது தெரியும். புதிய பாராளுமன்றத்தில் செங்கோல் நிறுவியதன் மூலம் தேசத்திற்கு தமிழ் கலாச்சாரத்தின் பங்களிப்பை பிரதமர் மோடி அங்கீகரித்துள்ளார்" என்று கூறியுள்ளார்.