நீங்க ஏசி வாங்கி 8 வருடங்கள் ஆகிட்டா? அரசு அசத்தல் அறிவிப்பு!
8 ஆண்டுகள் பழமையான ஏசி வைத்திருப்போருக்கு முக்கிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
ஏசி பயன்பாடு
நாடு முழுவதும் இந்த ஆண்டு கோடை காலம் முன்கூட்டியே தொடங்கிய நிலையில், தற்போது வெயிலின் தாக்கமும் மிக அதிகமாக காணப்பட்டு வருகிறது.
பகல் பொழுது மட்டுமல்லாமல், இரவு நேரங்களிலும் அனல் குறையாமல் இருப்பதால் வெப்பத்தைச் சமாளிக்க ஏசி வாங்குவோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால் இரவு நேரங்களில் மின்நுகர்வு அதிகரித்து தேவை அதிகரித்துள்ளது.
அரசு திட்டம்
2023-24-ஆம் ஆண்டில், நாடு முழுவதும் வீடுகளில் ஒரு கோடியே 9 லட்சம் ஏ.சி.க்கள் பயன்பாட்டில் இருந்துள்ளது. இன்னும் 3 ஆண்டுகளில் மேலும் 21 சதவிகிதம் அதிகரிக்கும் எனக் கூறப்படுகிறது. இந்நிலையில், அதிக மின்சாரத்தை எடுத்துக்கொள்ளும் பழைய ஏசிக்களை உபயோகத்திலிருந்து நீக்க மத்திய அரசு ஒரு திட்டத்தை முன்னெடுத்துள்ளது.
அதன்படி, 8 ஆண்டுகள் பழமையான ஏசிக்களை மாற்றிவிட்டு, புதிய ஏசி வாங்குவோருக்கு ஊக்கத் தொகை அல்லது மின் கட்டணத்தில் சலுகை வழங்கப்படும்.
இதற்காக ஏசி உற்பத்தி நிறுவனங்களுடன் மத்திய அரசு பேச்சுவார்த்தை நடத்தி வரும் நிலையில், விரைவில் இத்திட்டம் செயல்பாட்டுக்கு வரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.