தமிழ்நாடு வானிலை மைய இணையதளத்தில் இந்தி: வெடித்த சர்ச்சை
தமிழ்நாடு வானிலை மையத்தின் இணையதள பக்கத்தில் இந்தி மொழியும் சேர்க்கப்பட்டிருப்பது சர்ச்சையாகியுள்ளது.
மும்மொழிக் கொள்கை இந்தி திணிப்பை கொண்டுவருகிறது என தமிழ்நாட்டில் கடுமையான எதிர்ப்பு உள்ளது.
இந்த நிலையில், இணைய பக்கம் ஒன்றில் இந்தி மொழி சேர்க்கப்பட்டுள்ளது சர்ச்சையாகியுள்ளது.
தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய இருமொழிகள் மட்டுமே இதுவரை, தமிழ்நாடு வானிலை மையத்தின் இணைய பக்கத்தில் வானிலை அறிக்கைகளாக வெளியிடப்பட்டு வந்தன.
ஆனால் இப்போது மூன்றாவதாக இந்தி மொழியில் வானிலை அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
இந்தி மொழியை மத்திய அரசு திணிப்பதாக தமிழ்நாடு அரசு தொடர்ந்து குற்றம்சாட்டி வரும் நிலையில், தமிழ்நாடு வானிலை மையத்தின் இணைய பக்கத்தில் புதிதாக இந்தி மொழி சேர்க்கப்பட்டுள்ளது பேசுபொருளாகியுள்ளது.