விசா இல்லாமல் இத்தனை நாடுகளுக்கு செல்லலாமா? மத்திய அரசு முக்கிய தகவல்!
விசா இல்லாமல் 26 நாடுகளுக்கு செல்லலாம் என மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது.
விசா
ஒரு நாட்டின் குடிமக்கள் மற்றறொரு நாட்டிற்குள் செல்ல விசா என்பது அவசியமான ஒன்று. சில நாடுகளுக்கு செல்வதற்கு எளிதாக விசா பெற்றுவிடலாம். ஆனால், கடுமையான விசா நடைமுறைகளைப் பின்பற்றும் சில நாடுகளும் உள்ளன.
இந்த நிலையில் மாநிலங்களவை உறுப்பினர் ஒருவர், இந்திய பாஸ்போர்ட்டின் தரவரிசை மற்றும் விசா இல்லாத பயணம் போன்றவற்றை குறித்து கேள்வி கேட்டிருந்தார். அதற்கு வெளியுறவு விவகாரங்கள் இணை மந்திரி கீர்த்தி வர்தன்சிங் அளித்த பதிலில் கூறியதாவது,
உலகம் முழுவதும் பாஸ்போர்ட்டுகளுக்கு தரவரிசையை வழங்கும் சில தனியார் நிறுவனங்கள் உள்ளன. அவர்களால் தீர்மானிக்கப்பட்ட அளவுருக்கள் இருந்தாலும், பரவலாக ஏற்றுக்கொள்ளப்பட்ட தரவரிசை முறை எதுவும் இல்லை.
மத்திய அரசு
அமைச்சகத்துக்கு கிடைத்த தகவல்களின்படி, இந்திய பாஸ்போர்ட்டுக்கு 26 நாடுகள் (அங்கோலா, தாய்லாந்து, நேபாளம், பூடான், மலேசியா, மாலத்தீவு, செர்பியா, பிலிப்பைன்ஸ், ருவாண்டா உள்ளிட்டவை) விசா இல்லாத நுழைவை வழங்குகின்றன.
40 நாடுகள் "ஆன்-அரைவல்" வசதியை (கிளம்பிச்செல்லும் தருவாயில் பெற்றுக்கொள்ளலாம்) வழங்குகிறது. அமைச்சகத்தின் இணையதளத்தில் இது கிடைக்கும். நேபாளம், பூடான் மற்றும் மாலத்தீவுகளின் குடிமக்களுக்கு விதிகளுக்கு உட்பட்டு விசா இல்லாத நுழைவை
இந்தியா வழங்குகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், விசா இல்லாத நாடுகள், 'ஆன்-அரைவல்' விசா நாடுகள் பற்றிய வெளியுறவு அமைச்சகத்தின் பட்டியலில் இ-விசாவை பயன்படுத்தி 58 நாடுகளுக்கு பயணிக்கலாம் எனவும் கூறப்பட்டுள்ளது.