இனி ஆதாருக்கு மாற்றாக பிறப்பு சான்றிதழ்? மத்திய அரசு முக்கிய தகவல்

Government Of India Aadhaar
By Sumathi Mar 10, 2025 11:45 AM GMT
Report

 பிறப்பு சான்றிதழ் குறித்து பரவிய தகவலுக்கு மத்திய அரசு விளக்கமளித்துள்ளது.

 பிறப்பு சான்றிதழ் 

ஆதார் கார்டு வாங்குதவற்கு கட்டாயம் பிறப்பு சான்றிதழ் அவசியம். இந்நிலையில் பிறப்பு சான்றிதழையே அடையாள ஆவணமாக பயன்படுத்தலாம் என்று தகவல்கள் பரவியது.

aadhaar

அரசு பள்ளி, கல்லூரிகளில் சேருவதற்கு, பாஸ்போர்ட், வாக்காளர் அடையாள அட்டை, திருமண சான்றிதழ் உள்பட அரசு சார்ந்த அனைத்து சேவைகளையும் பெறுவதற்கு பள்ளி ஆவணங்கள், ஆதார் அடையாள அட்டை மற்றும் பிற அடையாள ஆவணங்களுக்கு மாற்றாக பிறப்பு சான்றிதழ் பயன்பட உள்ளதாக சமூக வலைத்தளங்களில் தீவிரமாக தகவல் பரவியது.

3வதாக பிறக்கும் பெண்குழந்தைக்கு இனி ரூ.50,000 - எம்பி அறிவிப்பு!

3வதாக பிறக்கும் பெண்குழந்தைக்கு இனி ரூ.50,000 - எம்பி அறிவிப்பு!

மத்திய அரசு விளக்கம்

எனவே மூத்த குடிமக்கள் உள்பட பொதுமக்கள் பிறப்பு சான்றிதழுக்கு பதிவு செய்ய, பெயரில் மாற்றங்களை செய்ய 2026-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 27-ந் தேதி கடைசி நாள் என்று மத்திய அரசு அறிவித்ததாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த தகவல் பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இனி ஆதாருக்கு மாற்றாக பிறப்பு சான்றிதழ்? மத்திய அரசு முக்கிய தகவல் | Central Govt Explains Birth Certificate Aadhaar

இந்நிலையில், இதுகுறித்து மத்திய அரசின் அதிகாரப்பூர்வ சமூக ஊடக கணக்கான பத்திரிகை அலுலக தகவல் சரிபார்ப்பகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,

"பிறப்பு சான்றிதழுக்கு விண்ணப்பிக்க 2026-ம் ஆண்டு ஏப்ரல் 27-ந் தேதி கடைசி நாள் என்று மத்திய அரசு அறிவித்ததாக பரவும் தகவல் தவறானது. பிறப்பு சான்றிதழ் தொடர்பாக இதுபோன்ற எந்தவித அறிவிப்பையும் மத்திய அரசு வெளியிடவில்லை" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.