அங்கிருந்து உடனடியாக வெளியேறுங்கள் - இந்தியர்களுக்கு மத்திய அரசு அவசர உத்தரவு!
சிரியாவிலிருந்து இந்தியர்கள் வெளியேற மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
உள்நாட்டு போர்
சிரியாவில் அதிபர் அல்-அஸாத் தலைமையில் ஆட்சி நடைபெற்று வருகிறது. இங்கு உள்நாட்டு போர் தீவிரமடைந்து வருகிறது.
அதன்படி கிளர்ச்சிப் படைகள், கடந்த ஒரு வாரமாக, சிரியாவில் அதிபர் பஷர் அல்-ஆசாத்தை அகற்றும் நோக்கில், தாக்குதலை நடத்தி வருகின்றன.
மத்திய அரசு உத்தரவு
மேலும், அலெப்போ மற்றும் ஹமா பகுதிகளை கிளர்ச்சியாளர்கள் கைப்பற்றியுள்ளனர். எனவே அங்குள்ள மக்கள் தப்பியோடி வருகின்றனர். இந்நிலையில், அங்குள்ள இந்தியர்கள் உடனடியாக அந்நாட்டில் இருந்து வெளியேறுமாறு மத்திய அரசு அறிவித்துள்ளது.
வெளியேற முடியாதவர்கள், அந்நாட்டிலேயே பாதுகாப்பான இடத்தில் இருக்குமாறு இந்திய வெளியேறவுத்துறை தெரிவித்துள்ளது. டமாஸ்கசில் உள்ள இந்திய தூதரகத்துடன் தொடர்பில் இருக்குமாறு பிரத்யேக தொலைபேசி எண்கள் மற்றும் மின்னஞ்சல்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
+963993385973 என்ற அவசர கால உதவி எண் மற்றும் hoc.damascus@mea.gov.in என்ற இ-மெயில் முகவரியை தொடர்பு கொள்ளலாம்.