Wednesday, May 7, 2025

2025; உலகில் அடுத்தடுத்து நடக்கப்போகும் பயங்கரம்.. பகீர் கிளப்பும் நாஸ்ட்ராடாமஸ் - பாபா வாங்கா!

United States of America Baba Vanga World
By Swetha 5 months ago
Report

பல்கேரிய நாட்டை சேர்ந்தவர் பாபா வங்கா. 1911ல் வடக்கு மேசிடோனியாவில் பிறந்தார்.

பாபா வாங்கா 

சிறுவயதில் கடுமையான புயல் ஒன்றில் சிக்கி கண் பார்வையை இழந்தார். அதில் அவருக்கு எதிர்காலத்தை கணித்து கூறும் சக்தி கிடைத்ததாக கூறப்படகிறது. 1996ல் மரணமடைந்தார். ஆன்மீகவாதி பாபா வாங்கா கணிப்புகளும் பெரும்பாலும் சரியாகவே இருந்துள்ளன.

2025; உலகில் அடுத்தடுத்து நடக்கப்போகும் பயங்கரம்.. பகீர் கிளப்பும் நாஸ்ட்ராடாமஸ் - பாபா வாங்கா! | Nostardamus And Baba Vanga Predictions Of 2025

அவரது கூற்றுப்படி, 2025 ஆம் ஆண்டில், மனித குலம் வேற்று கிரகவாசிகளைச் சந்திக்கும், வேற்றுகிரகவாசிகள் ஒரு உலகளாவிய நிகழ்வில் (அது ஒரு விளையாட்டு நிகழ்வாக இருக்கலாம்) தங்களை வெளிக்காட்டிக்கொள்வார்கள்.

மேலும் டெலிபதி மூலம் தொடர்பு கொள்ளும் திறனை மனிதர்கள் பெறுவார்கள், மனித பரிணாம வளர்ச்சியில் ஒரு குறிப்பிடத்தக்கப்ப் பாய்ச்சல் ஏற்படும் என்று கணித்துள்ளார். அதேபோல, 16ம் நூற்றாண்டின் புகழ்பெற்ற பிரெஞ்சு ஜோதிடர் நாஸ்ட்ராடாமஸ். அழிவின் தீர்க்கதரிசி என்று அழைக்கப்படுகிறார்.

நெருங்கும் அழிவுகாலம்? 2024ல் நிகழப்போகும் பேரழிவுகள் - நாஸ்ட்ராடாமஸின் ஷாக் கணிப்பு!

நெருங்கும் அழிவுகாலம்? 2024ல் நிகழப்போகும் பேரழிவுகள் - நாஸ்ட்ராடாமஸின் ஷாக் கணிப்பு!

நாஸ்ட்ராடாமஸ் 

2025 ஆம் ஆண்டிற்கான சில பயங்கரமான கணிப்புகள் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதாவது, வருகின்ற ஆண்டில் உலகின் முக்கிய சக்திகளுக்கு இடையே போர் ஏற்படும் என்று கணித்திருகிறார். அவர் எழுதி வைத்ததின்படி, இந்த மோதல் பரவலான அழிவுக்கு வழிவகுக்கும்,

2025; உலகில் அடுத்தடுத்து நடக்கப்போகும் பயங்கரம்.. பகீர் கிளப்பும் நாஸ்ட்ராடாமஸ் - பாபா வாங்கா! | Nostardamus And Baba Vanga Predictions Of 2025

இது உலகையே உலுக்கக்கூடும். நாஸ்ட்ராடாமஸின் கூற்றுப்படி, உலகம் ஒரு பொருளாதார சரிவைச் சந்திக்கும், அது பேரழிவை ஏற்படுத்தும், இது பரவலான அமைதியின்மை மற்றும் சமூக எழுச்சிக்கு வழிவகுக்கும்.

இந்த சரிவின் தாக்கம், மெக்சிகோ, லத்தீன் அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவின் சில பகுதிகளில் மிகவும் கடுமையானதாக இருக்கலாம். அங்கு பொருளாதார உறுதியற்ற தன்மை தற்போதுள்ள சவால்களை மேலும் மோசமாக்கும். பணவீக்கம், வர்த்தக பதட்டங்கள் மற்றும் பொருளாதார சமத்துவமின்மை அதிகரிக்கும் என்று கணித்துள்ளார்.