இந்த மாத இறுதிக்குள் ஆளுநர் ஆர்‌.என் ரவியை மத்திய அரசு நீக்கும் - ஆர்.எஸ்.பாரதி காட்டம்!

Tamil nadu Governor of Tamil Nadu
By Sumathi Jul 04, 2023 07:47 AM GMT
Report

இந்த மாத இறுதிக்குள் தமிழ்நாட்டு ஆளுநர் ஆர்‌.என் ரவியை மத்திய அரசு நீக்கி விடுவதாக ஆர்.எஸ்.பாரதி தெரிவித்துள்ளார்.

ஆர்.எஸ்.பாரதி

தென்காசி வடக்கு மாவட்ட திமுக சார்பில் கலைஞர் நூற்றாண்டு விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதற்கு சிவகிரியில் வாசுதேவ நல்லூர் வடக்கு ஒன்றிய செயலாளர் பொன் முத்தையா பாண்டியன் தலைமை தாங்கினார்.

இந்த மாத இறுதிக்குள் ஆளுநர் ஆர்‌.என் ரவியை மத்திய அரசு நீக்கும் - ஆர்.எஸ்.பாரதி காட்டம்! | Center Remove Governor Rn Ravi Says Rs Bharathi

இதில், முக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, தலைமை கழக வழக்கறிஞர் சூர்யா வெற்றி கொண்டான், தென்காசி வடக்கு மாவட்ட செயலாளர் ராஜா எம்.எல்.ஏ உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். அப்போது பேசிய ஆர்.எஸ்.பாரதி, "ஆளுநர் ஆர்.என்.ரவி தொடர்ந்து அதிகார அத்துமீறல்களில் ஈடுபட்டு வருகிறார்.

திட்டவட்டம்

அமைச்சரவையில் யார் இருக்க வேண்டும் என்று முடிவு செய்யும் அதிகாரம் முதலமைச்சருக்குத்தான் உண்டு. தமிழ்நாட்டில் அவர் அமைச்சரை நீக்கி நோட்டீஸ் கொடுக்கிறார். ஆனால் நான்கு மணி நேரத்தில் அந்த நோட்டீஸ் வாபஸ் பெறப்படுகிறது.

ஆளுநருக்கு எந்த அதிகாரமும் இல்லை. ஆனால் அவர் திமுக அரசுக்கு எதிராக வேண்டும் என்றே செயல்பட்டு வருகிறார். தமிழ்நாட்டில் எந்த ஆளுநர் வந்தாலும் நமது முதலமைச்சரை ஒன்றும் செய்ய முடியாது.

திமுக போட்ட வழக்குகள் ஒருபோதும் தோற்றது கிடையாது. இந்த மாத இறுதிக்குள் தமிழ்நாட்டு ஆளுநர் ஆர்‌.என் ரவியை மத்திய அரசு நீக்கம் செய்யும். புதிய ஆளுநரை மத்திய அரசே நியமனம் செய்யும்" எனத் தெரிவித்துள்ளார்.