தமிழகத்தில் பாஜகவினர் உயிருடன் இருக்க முடியாது : ஆர்.எஸ் பாரதி பேச்சால் சர்ச்சை
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகே இனாம் மணியாச்சி பஸ் நிறுத்தம் அருகே திமுக சார்பில் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் 70வது பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் நடந்தது. கூட்டத்தில் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கலந்து கொண்டு பேசினார்.
அண்ணாமலை அரைவேக்காடு
அப்போது நிகழ்ச்சியில் பேசிய ஆர்.எஸ் பாரதி : நான் அரசியலுக்கு வந்த போது அண்ணாமலையின் தந்தை கூட பிறந்திருக்கமாட்டார். ஆகவே அண்ணாமலை போன்ற அரைவேக்காடுகளுக்கு பதில் கூற வேண்டியுள்ளது.
உயிருடன் இருக்க முடியாது
சிலருக்கு திராவிடம் என்ற பெயரை கேட்டாலே வேப்பம் காய் போல் கசக்கின்றது, ஆகவே தான் பொறுப்பு ஏற்றதும் முதல்வர் மு.க.ஸ்டாலின் இது திராவிட மாடல் ஆட்சி என்றார்.அண்ணாலை என்ன பேசுகிறார், எதை பேசுகிறார் என்று தெரியவில்லை எனக் கூறிய ஆர்.எஸ் பாரதி.
நாங்கள் இந்திரா காந்தியை பார்த்தவர்கள், மிசாவை சந்தித்தவர்கள், சர்காரிய கமிஷனை தவிடு பொடியாக்கிய கட்சி என்பதனை அண்ணாமலை உணர்ந்து கொள்ள வேண்டும். பாஜகவினர் உயிருடன் இருக்க முடியாது எனக் கூறினார், ஆர் எஸ் பாரதியின் இந்த பேச்சு திமுக மற்றும் பாஜகவினரிடையே பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது