ப்ளு சட்டை மாறன் இயக்கிய ’ஆன்டி இந்தியன்’ படத்திற்கு சென்சார் போர்ட் அனுமதி மறுப்பு
தமிழில் வெளியாகும் திரைப்படங்களை விமர்சனம் செய்து இணையத்தில் பிரபலமானவர் ப்ளு சட்டை மாறன். இவரின் விமர்சன பாணிக்கு ரசிகர்கள் இருந்தாலும் அதன்மீது கடுமையான விமர்சனங்களும் உண்டு. திரைப்படங்களை விமர்சனம் மட்டுமே செய்து வந்தவர் சொந்தமாக ‘ஆன்டி இந்தியன்’ என்கிற பெயரில் திரைப்படம் ஒன்றை இயக்கியுள்ளார்.
இந்த படத்திற்கு அவரே கதை, திரைக்கதை, வசனம் எழுதி இசையமைத்து இயக்கியிருக்கிறார். இந்த படத்தினை சென்சார் சர்டிபிகேட் பெறுவதற்காக, ஏப்ரல் 5ம் தேதி அன்று தணிக்கைக் குழுவின் பார்வைக்காக அனுப்பி வைக்த்துள்ளார்.
சமகால மதம் சார்ந்த பிரச்சனகளையும், அரசியலையும் மையப்படுத்து இந்த எடுக்கப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியானது. இதனால் படத்தின் மீதான எதிர்பார்ப்பும் அதிகமானது.
படத்தை பார்த்த தணிக்கைக்குழுவினர் இந்த படத்திற்கு சான்று தர மறுத்ததோடு முழுவதுமாக தடை போட்டுவிட்டனர். ஆனால், மறு தணிக்கைக்கு மேல்முறையீடு செய்வோம் என தயாரிப்பாளர் தரப்பு தெரிவித்துள்ளது.