இனி பழனி முருகன் கோவிலுக்குள் செல் போன் கொண்டு செல்லக்கூடாது - அரசு அதிரடி உத்தரவு!

Madurai Dindigul
By Vinothini Sep 20, 2023 04:40 AM GMT
Report

பழனி முருகன் கோவிலுக்கு செல்லும் பக்தர்கள் இனி செல்போன் கொண்டு செல்லக்கூடாது என்று அரசு உத்தரவிட்டுள்ளது.

முருகன் கோவில்

பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலுக்கு செல்லும் பக்தர்கள் கருவறையை போட்டோ மற்றும் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பரப்புவது அதிகரித்து கொண்டே வருகிறது. இது அவமதிப்பதாக இருக்கும் என்று கருதி இதனை தடுக்க வேண்டும் என மதுரை உயர்நீதிமன்ற கிளையில் வழக்கு தொடரப்பட்டது.

cellphones-banned-in-palani-murugan-temple

இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் பழனி கோவிலில் செல்போன் கொண்டு செல்ல தடை விதிக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.

செல்போனுக்கு தடை

இந்நிலையில், கோவில் நிர்வாகம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், பழனி கோயில் மலை மீது அக்டோபர் 1ம் தேதி முதல் செல்போன் கொண்டு செல்ல தடை அமலுக்கு வருகிறது. எனவே பக்தர்கள் கைபேசி மற்றும் புகைப்படம் எடுக்கும் வீடியோ, சாதனங்களை கோவிலுக்கு கொண்டு வருவதை தவிர்க்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

cellphones-banned-in-palani-murugan-temple

அதனை மீறி கொண்டுவரும் பக்தர்கள் கைபேசி மற்றும் புகைப்படம், வீடியோ எடுக்கும் சாதனங்களை கோவில் நுழைவாயிலில் பாதுகாப்பு மையங்களில் ஒரு கைபேசிக்கு ரூ.5 கட்டணம் செலுத்தி ஒப்படைத்துவிட்டு செல்லவேண்டும். தரிசனம் முடிந்துவிட்டு செல்லும்போது திரும்ப பெற்றுகொள்ளவும் என்று கோவில் நிர்வாகம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.