எமர்ஜென்சி அலர்ட்.. இன்று மொபைலுக்கு அபாய ஒலியுடன் மெசேஜ் வரும், யாரும் பயப்படவேண்டாம் - எதற்காக தெரியுமா?

Tamil nadu
By Vinothini Oct 20, 2023 07:03 AM GMT
Report

 மொபைலுக்கு இன்று எமர்ஜென்சி மெசேஜ் வருவது குறித்து தமிழக அரசு தகவல் தெரிவித்துள்ளது.

அலர்ட்

தமிழ்நாடு மாநில பேரிடர் மேலாண்மை ஆணையமும், தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையமும் மத்திய அரசின் தொலைத்தொடர்பு துறையுடன் இணைந்து, மேம்படுத்தவும், பேரிடர்களின் போது பொதுமக்களின் அவசரகால பாதுகாப்பு தகவல்தொடர்புகளை மற்றும் நல்வாழ்வை உறுதிப்படுத்தவும் ‘செல் ஒலிபரப்பு எச்சரிக்கை’ சோதனை ஓட்டம் இன்று நடைபெற உள்ளது.

செல் ஒலிபரப்பு எச்சரிக்கை

இந்த “செல் ஒலிபரப்பு எச்சரிக்கை” முறை என்பது ஒரு அதிநவீன தொழில்நுட்பமாகும். இதில் ஒரு செல்போன் கோபுரத்தின் குறிப்பிட்ட எல்லைக்குள் உள்ள அனைத்து செல்பேசிகளுக்கும், இயற்கை இடர்பாடு குறித்த எச்சரிக்கைகள் ஒரே நேரத்தில் சென்றடையக்கூடிய வசதி உள்ளது.

அதிமுகவுடன் கூட்டணி? எடப்பாடி பழனிச்சாமி என்னை அழைத்தார் - சீமான் பேட்டி!

அதிமுகவுடன் கூட்டணி? எடப்பாடி பழனிச்சாமி என்னை அழைத்தார் - சீமான் பேட்டி!

எச்சரிக்கை

இந்நிலையில், கடுமையான வானிலை எச்சரிக்கைகள் (அதாவது சுனாமி, மழை, வெள்ளம், பூகம்பம் போன்றவை) பொதுப் பாதுகாப்புச் செய்திகள், வெளியேற்ற அறிவிப்புகள் மற்றும் பிற அவசரகால எச்சரிக்கைகளை வழங்க “செல் ஒலிபரப்பு எச்சரிக்கை” பயன்படுத்தப்பட உள்ளது.

செல் ஒலிபரப்பு எச்சரிக்கை

இந்த தொழில்நுட்பம் பேரிடர் எச்சரிக்கை தகவல்கள், சாத்தியமான அச்சுறுத்தல்கள் மற்றும் நெருக்கடியான சூழ்நிலைகளை பொதுமக்களுக்கு உரிய நேரத்தில் பரவலாக தெரிவிக்க பயன்படுத்தப்பட உள்ளது.

இன்று இது குறித்த எச்சரிக்கை அபாய ஒலியுடன் மக்களின் செல்போனுக்கு வரும், இது வெறும் சோதனைச் செயல்பாட்டின் ஒரு பகுதியே என்றும், உண்மையான அவசரநிலையைக் குறிக்கவில்லை என்றும் தெரிவிக்கப்படுகிறது.