கேரளாவில் கொட்டித் தீர்க்கும் கனமழை - 10 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் - மக்களுக்கு எச்சரிக்கை
கேரளாவில் கொட்டித் தீர்க்கும் கனமழையால் 10 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் அறிவிக்கப்பட்டுள்ளது.
கனமழைக்கு 10 பேர் பலி
கேரளாவில் கடந்த சில வாரங்களாக கனமழை பெய்து வருகிறது. இந்த கனமழையால், 10 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், மழை வெள்ளத்தில் அடித்துச் சென்ற சிலரை காணவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பல இடங்களில் ஆறுகளில் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. பல ஓடைகள் நிரம்பி வழிகிறது.
கேரளாவில் கனமழை பெய்து வருவதால் மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
ரெட் அலார்ட்
மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் திருவனந்தபுரம், கொல்லம், பத்தனம்திட்டா மற்றும் காசர்கோடு ஆகிய 4 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு நிற எச்சரிக்கையும், மேலும் 10 மாவட்டங்களுக்கு ரெட் அலார்ட் விடுத்துள்ளது.