ரஜினி முதல் அம்பானி வரை - மோடியின் பதவியேற்பு விழாவில் குவிந்த பிரபலங்கள்!

Rajinikanth BJP Narendra Modi Tamil Actors Lok Sabha Election 2024
By Jiyath Jun 10, 2024 11:29 AM GMT
Report

பிரதமர் மோடியின் பதவியேற்பு விழாவில் முக்கிய பிரபலங்கள் பலரும் பங்கேற்றனர். 

பதவியேற்பு விழா

நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி 292 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்தது. இதனையடுத்து நாட்டின் பிரதமராக தொடர்ந்து 3-வது முறையாக நரேந்திர மோடி பதவியேற்றுக் கொண்டார்.

ரஜினி முதல் அம்பானி வரை - மோடியின் பதவியேற்பு விழாவில் குவிந்த பிரபலங்கள்! | Celebrities Participated In Modi Oath Taking

அவருக்கு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். அவரை தொடர்ந்து 71 பேர் மத்திய அமைச்சர்களாக பதவியேற்றுக்கொண்டனர். அவர்கள் அனைவருக்கும் குடியரசுத் தலைவர் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

ஆந்திரா - இத்தாலி செல்லும் மோடி, மணிப்பூருக்கு எப்போது செல்வார்? ப.சிதம்பரம் கேள்வி!

ஆந்திரா - இத்தாலி செல்லும் மோடி, மணிப்பூருக்கு எப்போது செல்வார்? ப.சிதம்பரம் கேள்வி!

பிரபலங்கள் 

இந்த பதவியேற்பு விழாவிற்காக தலைநகர் டெல்லியில் குறிப்பாக குடியரசுத் தலைவர் மாளிகையைச் சுற்றி சிறப்பு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. இந்த விழாவில் தனது மனைவி லதா உடன் நடிகர் ரஜினிகாந்த் கலந்துகொண்டார்.

ரஜினி முதல் அம்பானி வரை - மோடியின் பதவியேற்பு விழாவில் குவிந்த பிரபலங்கள்! | Celebrities Participated In Modi Oath Taking

அதேபோல் நடிகையும் பாஜக எம்.பி.யுமான கங்கனா ரனாவத் வெண்ணிற ஆடை அணிந்து வந்து பங்கேற்றார். மேலும், பாலிவுட் நடிகர்கள் ஷாருக்கான், அக்ஷய் குமார் மற்றும் ரிலையன்ஸ் நிறுவனத் தலைவர் முகேஷ் அம்பானி, அவரது மகன் ஆனந்த் அம்பானி ஆகியோரும் கலந்துகொண்டனர்.