5 மணி நேர போர் நிறுத்தம்!! காசா மக்கள் எகிப்த் நாட்டிற்கு அகதிகளாக செல்ல அறிவுறுத்தல்!!
நடைபெற்று வரும் இஸ்ரேல் - ஹமாஸ் அமைப்பினருக்கு இடையேயான போர் 5 மணி நேரம் நிறுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இஸ்ரேல் ஹமாஸ் போர்
உலகையே பெரும் வேதனைக்குள்ளாகி இருக்கும் இஸ்ரேல் - ஹமாஸ் அமைப்பினருக்கு இடையேயான போர் கடந்த 7-ஆம் தேதி துவங்கி தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. அக்டோபர் 7 முதல் இஸ்ரேலிய தாக்குதல்களில் 2,750 பாலஸ்தீனியர்கள் இறந்ததாகவும், 9,700 பேர் காயமடைந்ததாகவும் காசா சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
பல உலக நாடுகளுக்கு இந்த போரை நிறுத்தும் படி இரு தரப்பிற்கும் கோரிக்கைகைள் வைத்து வரும் சூழலில், நாளுக்கு நாள் போர் அதிகரித்து கொண்டே தான் போகிறது. பல ஆயிரக்கணக்கான உயிர் சேதமும், பொருள் சேதமும் இந்த போரினால் ஏற்பட்டு வருகின்றது.
போர் நிறுத்தம்
இந்நிலையில், காசா பகுதியில் அதிகரித்து சேதங்களுக்கு மத்தியில் இஸ்ரேல், அமெரிக்கா மற்றும் எகிப்து நாடுகள் போர் நிறுத்த உடன்படிக்கைக்கு ஒப்புக்கொண்டுள்ளன. இந்த போர் நிறுத்தத்தின் போது, எகிப்து நாட்டின் ரஃபா எல்லையின் வழியாக தெற்கு காசாவில் இருந்து மக்கள் அகதிகளாக எகிப்து நாட்டிற்கு செல்ல அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
குறுகிய நிலப்பரப்பான காசா நகரம், அதன் மேற்கில் மெடிட்டரேனியன்(Mediterranean) கடலும், கிழக்கு மற்றும் வடக்கில் இஸ்ரேல் நாடும் அதன் தென்மேற்கில் எகிப்து நாடும் உள்ளது குறிப்பிடத்தக்கது.