வயல்வெளி முழுவதும் சிசிடிவி கேமராக்கள் - பூண்டு திருட்டை தடுக்க களமிறங்கிய விவசாயிகள்!
விவசாயிகள் பூண்டு திருட்டை தடுக்க நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
பூண்டு திருட்டு
சென்னைக்கு மகாராஷ்டிரா, மத்திய பிரதேசம் மற்றும் குஜராத் மாநிலங்களிலிருந்து பூண்டு வருகிறது. சில நேரங்களில் தமிழ்நாட்டின் மலைப் பகுதி பூண்டுகளும் வரும். வரத்து குறைவால் பூண்டின் விலை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது.
அந்த வரிசையில், மத்திய பிரதேசத்தில், சமையலுக்கு பயன்படுத்தப்படும் பூண்டு கிலோ ஒன்றுக்கு ரூ.400 முதல் ரூ.500 வரை விலை வைத்து விற்பனை செய்யப்படுகிறது.
சிசிடிவி கேமராக்கள்
இதனைத் தொடர்ந்து, வயல்வெளிகளில் உள்ள பூண்டை சிலர் திருடி சென்று விடுகின்றனர். இதனால், விவசாயிகளுக்கு நஷ்டம் ஏற்படுகிறது. எனவே, இதனை தடுக்க சிந்த்வரா பகுதியில் உள்ள வயல்வெளிகளில் சிசிடிவி கேமராக்களை பொருத்தி கண்காணிப்பு பணியை மேற்கொண்டு வருகின்றனர்.
இதுகுறித்து, பூண்டு விவசாயம் செய்து வரும் ராகுல் தேஷ்முக் என்பவர் கூறுகையில், 13 ஏக்கர் நிலத்தில் ரூ.25 லட்சம் மதிப்பில் முதலீடு செய்து பூண்டு பயிரிட்டு உள்ளேன். அவற்றை சந்தையில் விற்பனை செய்ததில், ரூ.1 கோடி வருவாய் கிடைத்துள்ளது.
இன்னும் அறுவடை செய்யப்படும். பயிர்களின் பாதுகாப்புக்காக சூரிய சக்தியை வயல்வெளியில் பயன்படுத்தினேன். 4 ஏக்கர்களில் பூண்டு பயிர்களை கண்காணிக்க 3 சிசிடிவி கேமராக்களை நிறுவியுள்ளேன் எனத் தெரிவித்துள்ளார்.