சிக்கும் ரோஜா? புது தலைவலி - ஆந்திர அரசியலில் பரபரப்பு!
ஊழல் புகார் காரணமாக ரோஜா உள்ளிட்ட 4 பேரை விசாரிக்க சிஐடிக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
முன்னாள் அமைச்சர் ரோஜா
ஆந்திராவில் நடிகை ரோஜா சுற்றுலா மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சராக இருந்தார். அப்போது, ஆடுதாம் ஆந்திரா என்ற நிகழ்ச்சிக்காக ஒதுக்கிய 100 கோடி ரூபாய் நிதியில் முறைகேடு நடந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.
தொடர்ந்து இந்த விவகாரத்தில் சிபிஐ விசாரணை நடத்தக் கோரி, ஆத்யா-பாத்யா அமைப்பினர் விஜயவாடா சிஐடி அலுவலகத்தில் புகார் அளித்தனர்.
ஊழல் புகார்
மேலும், இதில் தர்மன கிருஷ்ணதாஸ் உள்ளிட்ட சிலருக்கும் தொடர்பு இருப்பதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் தற்போது ரோஜா, தர்மன கிருஷ்ணதாஸ் உள்ளிட்டோர் மீது நடவடிக்கை எடுக்க விஜயவாடா மாநகர காவல் ஆணையருக்கு சிஐடி ஏடிஜிபி உத்தரவிட்டுள்ளார்.
இப்போது சிஐடி இந்த வழக்கு விசாரணையைத் தொடங்கியுள்ள நிலையில், விரைவில் ரோஜா உள்ளிட்டோர் விசாரணைக்கு அழைக்கப்படுவார்கள் எனத் தெரிகிறது.