ஆர்.ஜி.கர் மருத்துவமனை முன்னாள் முதல்வர் சந்தீப் கோஷ் கைது.. சிபிஐ அதிரடி நடவடிக்கை!

West Bengal Murder Doctors
By Vidhya Senthil Sep 03, 2024 05:51 AM GMT
Vidhya Senthil

Vidhya Senthil

in இந்தியா
Report

 கொல்கத்தா ஆர்.ஜி.கர் மருத்துவமனையின் முன்னாள் முதல்வர் சந்தீப் கோஷியை காவல்துறையினர் அதிரடியாகக் கைது செய்துள்ளனர்.

 கொல்கத்தா 

மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவில் ஆர்.ஜி.கர் மருத்துவக்கல்லூரி மற்றும் மருத்துவமனையின் கருத்தரங்கு அறையில் கடந்த ஆக.9-ம் பயிற்சி பெண் மருத்துவர் பாலியல் துன்புறுத்தலுக்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்டார். இந்தச் சம்பவம் தேசிய அளவில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

ஆர்.ஜி.கர் மருத்துவமனை முன்னாள் முதல்வர் சந்தீப் கோஷ் கைது.. சிபிஐ அதிரடி நடவடிக்கை! | Cbi Arrestes Ex Principal Of Rg Kar Hospital

இது தொடர்பாக சஞ்சய் ராய் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும், மருத்துவமனையின் முன்னாள் முதல்வர் சந்தீப் கோஷ் உட்படப் பலரிடம் சிபிஐ விசாரணை மேற்கொண்டு வருகிறது.

பெண் மருத்துவர் கொலை; செஞ்சது ஒருவர் இல்லை 8 பேர் - கணித்து பிரபல ஜோசியர்!

பெண் மருத்துவர் கொலை; செஞ்சது ஒருவர் இல்லை 8 பேர் - கணித்து பிரபல ஜோசியர்!

 நிதி முறைகேடு

இந்நிலையில், நிதி முறைகேடுகள் தொடர்பாக மருத்துவமனை கண்காணிப்பாளர் அளித்த புகாரின் அடிப்படையில் முன்னாள் முதல்வர் சந்தீப் கோஷிடம் விசாரணை நடத்தி வந்தது.இதனையடுத்து நேற்றிரவு அவர் கைது செய்யப்பட்டார்.

ஆர்.ஜி.கர் மருத்துவமனை முன்னாள் முதல்வர் சந்தீப் கோஷ் கைது.. சிபிஐ அதிரடி நடவடிக்கை! | Cbi Arrestes Ex Principal Of Rg Kar Hospital

மேலும் பயிற்சி பெண் மருத்துவர் கொலையை அடுத்து ஆர்.ஜி.கர் மருத்துவமனையிலிருந்து கொல்கத்தா தேசிய மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சந்தீப் கோஷ் நியமிக்கப்பட்டார்.அப்போது அவருக்கு எதிரான போராட்டங்கள் தீவிரமடைந்த நிலையில், விடுமுறையில் சென்ற நிலையில் தற்பொழுது அவர் கைது செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.