தமிழகத்திற்கு தண்ணீர் திறக்கமுடியாது - டி.கே.சிவக்குமார் திட்டவட்டம்!

Tamil nadu Karnataka
By Sumathi Jul 01, 2023 03:58 AM GMT
Report

தமிழகத்துக்கு காவிரி நீர் திறக்க சாத்தியமில்லை என்று டி.கே.சிவக்குமார் தெரிவித்துள்ளார்.

 காவிரி நீர் 

கர்நாடக துணை முதல்வரான டி.கே.சிவக்குமார் டெல்லி சென்றுள்ளார். அங்கு ஜல்சக்தித்துறை மந்திரி கஜேந்திரசிங் ஷெகாவத்தை நேரில் சந்தித்து நிலுவையில் உள்ள கர்நாடக நீர்ப்பாசன திட்டங்களுக்கு அனுமதி வழங்குமாறு கோரினார்.

தமிழகத்திற்கு தண்ணீர் திறக்கமுடியாது - டி.கே.சிவக்குமார் திட்டவட்டம்! | Cauvery Water To Tamil Nadu Tk Shivakumar

இதற்கிடையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், தென்மேற்கு பருவமழை கர்நாடகத்தில் இன்னும் பெய்யவில்லை. அதனால் கிருஷ்ணராஜ சாகர் (கே.ஆர்.எஸ்.) உள்பட பெரும்பாலான அணைகளில் நீர் இருப்பு குறைவாக உள்ளன.

டி.கே.சிவக்குமார் பேட்டி

பெங்களூரு மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் குடிநீர் பிரச்சினை ஏற்பட்டுள்ளது. காவிரி நிர்வாக ஆணையம் தமிழ்நாட்டிற்கு தண்ணீர் திறந்துவிடும்படி உத்தரவிட்டுள்ளது. ஆனால் போதிய நீர் இருப்பு இல்லாததால் தமிழ்நாட்டிற்கு காவிரி நீர் திறக்க சாத்தியமில்லை.

இந்த முறை தண்ணீர் வழங்க சாத்தியம் இல்லை. மேகதாது திட்டத்தால் தமிழ்நாட்டிற்கு பாதிப்பு இல்லை. இதுகுறித்து அந்த மாநிலத்திற்கு விவரிக்க முயற்சி செய்கிறோம். அரசியலை தாண்டி இந்த விஷயத்தில் முடிவு எடுக்க வேண்டியுள்ளதாக தெரிவித்துள்ளார்.